ADDED : ஜூலை 17, 2024 01:03 AM
செங்கல்பட்டு, சென்னை கண்ணகிநகரைச் சேர்ந்தவர் வீரமருது, 31. கஞ்சா வியாபாரி. இவர், மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் வசித்தார்.
கடந்த மே மாதம் 17ம் தேதி, அவரது வீட்டை போலீசார் சோதனைசெய்ததில், 16.5 கிலோகஞ்சாவை பறிமுதல்செய்தனர்.
படாளம் போலீசார் அவரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதைத் தொடர்ந்து, வீரமருது மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க, கலெக்டருக்கு எஸ்.பி.,சாய்பிரணீத் பரிந்துரை செய்தார்.
இதனையேற்று, வீரமருதுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய, கலெக்டர் அருண்ராஜ் நேற்று உத்தரவிட்டார்.