/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பூஞ்சேரி சந்திப்பு சாலையின் இணைப்பு பணிகள் துவக்கம் பூஞ்சேரி சந்திப்பு சாலையின் இணைப்பு பணிகள் துவக்கம்
பூஞ்சேரி சந்திப்பு சாலையின் இணைப்பு பணிகள் துவக்கம்
பூஞ்சேரி சந்திப்பு சாலையின் இணைப்பு பணிகள் துவக்கம்
பூஞ்சேரி சந்திப்பு சாலையின் இணைப்பு பணிகள் துவக்கம்
ADDED : ஜூலை 17, 2024 01:04 AM

மாமல்லபுரம், மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரி உட்புற பகுதியில், கடந்த 25 ஆண்டுகளுக்கு முன், பழைய மாமல்ல புரம் சாலையாக இருந்தது.
கிழக்கு கடற்கரை சாலை, கடந்த 1998ல் இருவழிப் பாதையாக மேம் படுத்தப்பட்டபோது, உட்புற பகுதி சாலைக்கு சற்று வடக்கில், புதிய கிழக்கு கடற்கரை சாலை அமைக்கப்பட்டு, வாகனங்கள் செல்கின்றன.
கிழக்கு கடற்கரை சாலை தடத்தில், மாமல்லபுரம் - புதுச்சேரி பகுதி, கடந்த 2018ல், தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டது.
தற்போது, நான்குவழிப் பாதையாகவும் மேம்படுத்தப்படுகிறது. பூஞ்சேரி பகுதியில், அரசு மருத்துவமனை சந்திப்பு முதல், திருக்கழுக்குன்றம் சாலை சந்திப்பு வரை, 1 கி.மீ., சாலை, குறுகிய அபாய வளைவுகள் காரணமாக தவிர்க்கப்பட்டது.
இரண்டு சந்திப்புகள் இடையே, முந்தைய சாலைக்கு சற்று வடக்கில், அரசு, தனியார் நிலங்களை கையகப்படுத்தி, புதிய புறவழிப்பாதை அமைக்கப் படுகிறது.
சென்னை, புதுச்சேரி நோக்கிச் செல்லும் வாகனங்கள், திருக்கழுக்குன்றம் சாலை சந்திப்பில் கடக்க, மேம்பாலம் அமைத்து, இப்பாதை பாலத்திற்கு இணைப்பாக உள்ளது.
அரசு மருத்துவமனை சந்திப்பில், புதிய பாதை பிரிகிறது. இச்சந்திப்பில், மாமல்லபுரம் உட்புற சாலை, பழைய கிழக்கு கடற்கரை சாலை ஆகியவையும் இணைகின்றன.
இப்பகுதியில் பழைய சாலையை மேலும் விரிவு படுத்தியும், உயர்த்தியும் அமைக்க வேண்டும்.புதிய சாலை உயரத்திற்கேற்ப, மாமல்லபுரம் உட்புற சாலை மட்டமும் உயர்த்தப்பட வேண்டும். சாலைகள் இணைப்புமேம்பாட்டிற்காக, தற்போது பணிகள் துவக்கப்பட்டுள்ளன.