/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ குரூப் -- -4 போட்டி தேர்வு 54,660 பேர் பங்கேற்பு குரூப் -- -4 போட்டி தேர்வு 54,660 பேர் பங்கேற்பு
குரூப் -- -4 போட்டி தேர்வு 54,660 பேர் பங்கேற்பு
குரூப் -- -4 போட்டி தேர்வு 54,660 பேர் பங்கேற்பு
குரூப் -- -4 போட்டி தேர்வு 54,660 பேர் பங்கேற்பு
ADDED : ஜூன் 07, 2024 07:07 PM
செங்கல்பட்டு:தமிழகத்தில், இந்த ஆண்டுக்கான குரூப் -- 4 போட்டித் தேர்வு, வரும் 9ம் தேதி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, அரசு பணியாளர் தேர்வாணையம் செய்து வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டத்தில், செங்கல்பட்டு, மதுராந்தகம், செய்யூர், திருக்கழுக்குன்றம், திருப்போரூர், தாம்பரம், பல்லாவரம் ஆகிய தாலுகாக்களில் உள்ள, 185 அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில், 54,660 பேர் பங்கேற்று, நாளை தேர்வு எழுதுகின்றனர்.
இதைத்தொடர்ந்து, தேர்வு மையங்களில் செய்ய வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம், கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், நேற்று நடந்தது.
இந்த கூட்டத்தில், கருவூலத்திலிருந்து வினாத்தாள்களை தேர்வு மையங்களுக்கு வாகனங்கள் வாயிலாக எடுத்துச்செல்ல, துணை தாசில்தார், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் இரண்டு உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
மையங்களில், பள்ளி தலைமையாசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவர். மையங்களில், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட வசதிகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் உள்ளிட்ட பணிகளை செய்ய, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார்.