/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வினியோகம் பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வினியோகம்
பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வினியோகம்
பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வினியோகம்
பாமாயில், துவரம் பருப்பு ரேஷனில் வினியோகம்
ADDED : ஜூன் 07, 2024 07:16 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், மே மாதத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்ட பொருட்கள், இந்த மாதம் வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, கலெக்டர் அருண்ராஜ் அறிக்கை:
தமிழக அரசு சிறப்பு பொது வினியோகத்திட்டத்தின் வாயிலாக, 2.23 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு, மாதம் தோறும் தலா ஒரு கிலோ துவரம் பருப்பு 30 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கும், மானிய விலையில் வழங்கி வருகிறது.
லோக்சபா தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பாமாயில், துவரம் பருப்பு கொள்முதல் செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது. அதன்பின், பாமாயில், துவரம் பருப்பு கிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில், அனைத்து குடும்ப அட்டைதாரர்களும், மே மாத்திற்கான பாமாயில், துவரம் பருப்பு உள்ளிட்டவற்றை, இந்த மாதம் முழுதும் பெற்று பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.