/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி இல்லை தென்னேரிப்பட்டு கிராமவாசிகள் வேதனை 2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி இல்லை தென்னேரிப்பட்டு கிராமவாசிகள் வேதனை
2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி இல்லை தென்னேரிப்பட்டு கிராமவாசிகள் வேதனை
2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி இல்லை தென்னேரிப்பட்டு கிராமவாசிகள் வேதனை
2 ஆண்டுகளாக குடிநீர் தொட்டி இல்லை தென்னேரிப்பட்டு கிராமவாசிகள் வேதனை
ADDED : ஜூன் 07, 2024 07:06 PM
சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துார் ஊராட்சிக்குட்பட்ட தென்னேரிப்பட்டு கிராமத்தில், விநாயகர் கோவில் அருகே, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி இருந்தது.
முறையான பராமரிப்பு இல்லாமல், மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி பழுதடைந்து, இடிந்து விழும் அபாய நிலையில் இருந்தது.
அதனால், அரசு அதிகாரிகள், கடந்த 2022ம் ஆண்டு, ஜூலை மாதம், சேதமடைந்த மேல்நிலை தொட்டியை இடித்து அகற்றினர்.
பின், குடிநீர் கிணற்றில் உள்ள மின் மோட்டாருடன் நேரடியாக குடிநீர் குழாய்கள் இணைக்கப்பட்டு, தற்போது குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நேரடியாக மின் மோட்டாரில் குழாய்கள் இணைக்கப்பட்டுள்ளதால், அழுத்தம் தாங்காமல், அடிக்கடி குழாய்களில் உடைப்பு ஏற்படுவதாக, அப்பகுதிவாசிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நீர்த்தேக்கத் தொட்டி இல்லாததால், மின்சாரம் இல்லாத நேரங்களில் குடிநீர் வினியோகம் செய்ய முடியாமல், அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படுவதாக, கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள், உடனடியாக புதிய மேல்நிலை குடிநீர் தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராமவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.