/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம் காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்
காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்
காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்
காஸ் நுகர்வோர் குறைதீர் கூட்டம் தேதி மாற்றம்
ADDED : ஜூன் 17, 2024 02:55 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட எரிவாயு நுகர்வோருக்கு உள்ள குறைகளை அறிய, எரிவாயு நுகர்வோர் குறைநீர் கூட்டம், வரும் 20ம் தேதி காலை 11:00 மணிக்கு, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்படுகிறது.
இக்கூட்டம், கலெக்டர் அலுவலக மக்கள் குறைதீர் அரங்கில், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், மாவட்ட எரிவாயு முகவர்களுடன், 21ம் தேதி நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், சில நிர்வாக காரணங்களால், 20ம் தேதிக்கு மாற்றப்பட்டு உள்ளது. எனவே, கூட்டத்தில் எரிவாயு நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பங்கேற்று பயன்பெறுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.