ADDED : ஜூன் 21, 2024 10:16 PM
மதுராந்தகம்,:மதுராந்தகம் அடுத்த கருங்குழியில், ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனத்தில், ஆனி மாத பவுர்ணமி விழா, நேற்று வெகு விமரிசையாக நடந்தது.
மக்கள் நலமுடன் வாழ, ஞானலிங்கத்திற்கு பூஜை செய்யப்பட்டு, யாகம் வளர்த்து, மஹா தீப ஆராதனை நடந்தது.
இதில், செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியிலிருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.