/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள் மாம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
மாம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
மாம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
மாம்பாக்கம் அரசு பள்ளியில் ரூ.3 லட்சத்தில் உபகரணங்கள்
ADDED : ஜூன் 21, 2024 10:15 PM
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த மாம்பாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், நோட்டு புத்தகம், தமிழ் உரை புத்தகம் உள்ளிட்ட உபகரணங்கள் வேண்டி, பள்ளியில் கோரிக்கை எழுந்தது.
இதை அறிந்த மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி, கோரிக்கைக்கான கல்வி உபகரணங்களை சொந்த செலவில் வாங்கி கொடுக்க முடிவு செய்தார்.
அதன்படி, நேற்று 10, பிளஸ் 1, பிளஸ் 2 படிக்கும் 544 மாணவ - மாணவியருக்கு, 3 லட்சம் ரூபாய் மதிப்புள்ள ஒவ்வொருவருக்கும், தமிழ் உரை, ஆறு நோட்டு புத்தகங்களை வழங்கினார்.