/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கல்பாக்கம் - திருச்சி பஸ் மீண்டும் இயக்கப்படுமா? கல்பாக்கம் - திருச்சி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
கல்பாக்கம் - திருச்சி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
கல்பாக்கம் - திருச்சி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
கல்பாக்கம் - திருச்சி பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
ADDED : ஜூன் 21, 2024 10:15 PM
கல்பாக்கம்:அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியம், புதுப்பட்டினம் ஊராட்சி பகுதிகளில், பல மாவட்ட பகுதியினர் வசிக்கின்றனர்.
இப்பகுதியிலிருந்து திருச்சி பகுதிக்கு செல்லும் பயணியர் வசதிக்காக, விழுப்புரம் கோட்டம், அரசு போக்குவரத்துக் கழகத்தின் கல்பாக்கம் பணிமனை கிளை சார்பில், கல்பாக்கம் - திருச்சி இடையே பல ஆண்டுகளுக்கு முன் பேருந்து இயக்கப்பட்டது.
இப்பேருந்து, தினமும் இரவு 7:15 மணிக்கு கல்பாக்கத்தில் புறப்பட்டு, காலை 2:30 மணிக்கு திருச்சியை அடையும். திருச்சியிலிருந்து சென்னை சென்று, பின் கல்பாக்கம் வந்தடையும்.
இப்பேருந்து, சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இப்பகுதி பயணியர், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய பகுதிகளுக்கு சென்று, திருச்சி செல்லும் நிலை உள்ளது.
அதனால், மீண்டும் கல்பாக்கம் - திருச்சி தடத்தில் அரசு பேருந்து இயக்க, போக்குவரத்துத் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி பயணியர் வலியுறுத்துகின்றனர்.