ADDED : ஜூலை 31, 2024 04:29 AM
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டத்தில், நுகர்வோருக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், நுகர்வோர் இணையம் அமைக்க, 2.32 லட்சம் ரூபாய் நிதியை, உணவுப்பொருள் வழங்கல்மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர், கடந்த ஆண்டு டிச., மாதம் உத்தரவிட்டார்.
அதைத் தொடர்ந்து, செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக வளாகத்தில், நுகர்வோருக்கான திட்டங்களை பொதுமக்கள் தெரிந்துகொள்ளும் வகையில், மின்னணு இணைய திரை அமைக்கப்பட்டது.
அதை, கலெக்டர் அருண்ராஜ், நேற்று துவக்கி வைத்தார்.