/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ வட்டார அளவிலான வாலிபால் போட்டி கடப்பாக்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல் வட்டார அளவிலான வாலிபால் போட்டி கடப்பாக்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல்
வட்டார அளவிலான வாலிபால் போட்டி கடப்பாக்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல்
வட்டார அளவிலான வாலிபால் போட்டி கடப்பாக்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல்
வட்டார அளவிலான வாலிபால் போட்டி கடப்பாக்கம் பள்ளி மாணவர்கள் அசத்தல்
ADDED : ஜூலை 31, 2024 04:27 AM

செய்யூர் : அச்சிறுபாக்கம் கல்வி வட்டாரத்திற்கு உட்பட்ட கடப்பாக்கம் ஜி.வி.ஆர்., மெட்ரிக்குலேஷன்பள்ளியில், பாரதியார் பிறந்த நாள் மற்றும்குடியரசு தினத்தைமுன்னிட்டு, பள்ளிமாணவர்களுக்குவட்டார அளவிலான வாலிபால் போட்டிநடந்தது.
இதில், அரசு, தனியார் என, 27 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர்.
நாக் அவுட் முறையில் நடந்த போட்டியில், யு - 14 வயது பிரிவு இறுதிப்போட்டியில், கடப்பாக்கம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், கடப்பாக்கம் கே.வி.எஸ்.,மெட்ரிக்குலேஷன் பள்ளிமாணவர்களைவீழ்த்தினர்.
யு - 17 வயது பிரிவு இறுதிப்போட்டியில் போந்துார் அரசுஉயர்நிலைப் பள்ளிமாணவர்கள், கடப்பாக்கம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளி மாணவர்களைவீழ்த்தினர்.
யு - 19 வயது பிரிவுஇறுதிப் போட்டியில், கடப்பாக்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வெண்ணாங்குப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களைவீழ்த்தி வெற்றிபெற்றனர்.
இதில் வெற்றி பெற்ற மாணவர்கள், அடுத்த கட்டமாக மாவட்ட அளவில் நடக்கும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.