/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு
லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு
லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு
லாட்டரி சீட்டு விற்பனை ஐவர் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 21, 2024 10:18 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் மற்றும் ராட்டினங்கிணறு பகுதிகளில், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக, செங்கல்பட்டு நகர போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அந்த பகுதிகளில் சோதனை நடத்திய போலீசார், லாட்டரி சீட்டுகள் விற்பனையில் ஈடுபட்ட செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த குமார், 56, சங்கர், 52, முருகன், 63, கணேசன், 51, தனபால், 56, உள்ளிட்டோரை காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்களிடமிருந்து, லாட்டரி சீட்டுகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.