ADDED : ஜூன் 03, 2024 04:35 AM
சென்னை, : சென்னை, நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ., உடற்கல்வியல் கல்லுாரிக்கு, மர்ம நபர், 'இ-மெயிலில்' 'உங்கள் கல்லுாரியில் வெடிகுண்டு வைத்துள்ளோம். 2ம் தேதி அதிகாலை, 2:04க்கு வெடிக்கும்' என, கூறியுள்ளார்.
அடுத்தடுத்து, சென்னை ஏர்போர்ட், பாரிமுனை ஒய்.எம்.சி.ஏ., அலுவலகத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
காவல் கட்டுப்பாட்டு அறைக்கு வந்த தகவலின்படி, மூன்று இடங்களிலும் சோதனை செய்யப்பட்டு, மர்மப் பொருள் ஏதும் சிக்காததால், வதந்தி என தெரிந்தது. அதனால், வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.