/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: காலிறுதியில் லுலு, நவார்ரோவிம்பிள்டன்: காலிறுதியில் லுலு, நவார்ரோ
விம்பிள்டன்: காலிறுதியில் லுலு, நவார்ரோ
விம்பிள்டன்: காலிறுதியில் லுலு, நவார்ரோ
விம்பிள்டன்: காலிறுதியில் லுலு, நவார்ரோ
ADDED : ஜூலை 08, 2024 11:03 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் காலிறுதிக்கு முதன் முறையாக நவார்ரோ, லுலு சன் முன்னேறினர்.
இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றில் அமெரிக்க வீராங்கனைகள் கோகோ காப் ('நம்பர்-2'), எம்மா நவார்ரோ ('நம்பர்-17') மோதினர். முதல் செட்டை நவார்ரோ 6-4 என கைப்பற்றினார்.
தொடர்ந்து சிறப்பாக செயல்பட்ட நவார்ரோ, அடுத்த செட்டையும் 6-3 என வசப்படுத்தினார். முடிவில் நவார்ரோ 6-4, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, கிராண்ட்ஸ்லாம் அரங்கில் முதன் முறையாக காலிறுதிக்கு முன்னேறினார்.
லுலு அபாரம்
மற்றொரு நான்காவது சுற்றில், 135வது இடத்திலுள்ள பிரிட்டனின் எம்மா ரடுகானு, 123 வதாக உள்ள நியூசிலாந்தின் லுலு சன் மோதினர். முதல் செட்டை 6-2 என கைப்பற்றிய லுலு, அடுத்த செட்டை5-7 என இழந்தார். மூன்றாவது, கடைசி செட்டில் சுதாரித்த லுலு, 6-2 வசப்படுத்தினார். 2 மணி நேரம், 50 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் லுலு 6-2, 7-5, 6-2 என வெற்றி பெற்றார்.
உக்ரைனின் ஸ்விட்டோலினா, 6-2, 6-1 என சீனாவின் வாங் சினை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் கஜகஸ்தானின் ரைபகினா 6-3, 3-0 என இருந்த போது கலின்ஸ்கயா (ரஷ்யா) காயத்தால் விலகினார்.
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் இத்தாலியின் மசெட்டி, பிரான்சின் பெர்ரிகார்டை சந்தித்தார். இதில் மசெட்டி, 4-6, 6-3, 6-3, 6-2 என வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.
65 ஆண்டில்...
குரோஷிய தந்தை, சீன அம்மாவுக்கு, நியூசிலாந்தில் பிறந்தவர் லுலு 23. ஆங்கிலம், சீனா, பிரெஞ்ச் மொழி பேசுவார். நேற்று ரடுகானுவை வீழ்த்திய லுலு, விம்பிள்டன் டென்னிசின் கடந்த 65 ஆண்டு வரலாற்றில், காலிறுதிக்கு முன்னேறிய முதல் நியூசிலாந்து வீராங்கனை ஆனார்.