ADDED : ஜூலை 09, 2024 09:56 PM

பிரவுன்ஸ்வெய்க்: சாலஞ்சர் டென்னிஸ் முதல் சுற்றில் வெற்றி பெற்றார் சுமித் நாகல்
ஜெர்மனியில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சுமித் நாகல், பிரேசிலின் மெலிகெனி ஆல்வசை சந்தித்தார்.
முதல் செட்டை சுமித் நாகல் 6-1 என எளிதாக வசப்படுத்தினார். அடுத்து நடந்த இரண்டாவது செட்டிலும் அசத்திய இவர், 6-4 என கைப்பற்றினார். முடிவில் சுமித் நாகல் 6-1, 6-4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
* தாய்லாந்தில் நடக்கும் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரிஷி ரெட்டி, தக்சினேஷ்வர் சுரேஷ் ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட்டில், நியூசிலாந்தின் அஜீத் ராய், ஜேம்ஸ் ஜோடியை வென்று, காலிறுதிக்கு முன்னேறியது.