/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச் விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்
விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்
விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்
விம்பிள்டன்: காலிறுதியில் ஜோகோவிச்
ADDED : ஜூலை 09, 2024 10:00 PM

லண்டன்: இங்கிலாந்தில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் உலகின் 'நம்பர்-37' வீராங்கனை டோன்னா வெகிச், 123வது இடத்திலுள்ள நியூசிலாந்தின் லுலு சனை சந்தித்தார். இரண்டு மணி நேரம், 8 நிமிடம் நீடித்த இப்போட்டியின் முடிவில் வெகிச் 5-7, 6-4, 6-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார். கடந்த 2013 முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் பங்கேற்கும் வெகிச், அரையிறுதிக்கு முன்னேறியது இது தான் முதன் முறை. முன்னதாக யு.எஸ்.ஓபன் (2019), ஆஸ்திரேலிய ஓபனில் (2023) காலிறுதிக்கு முன்னேறியது தான் அதிகம்.
பெண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் செக் குடியரசின் பார்பரா கிரெஜ்சிகோவா, அமெரிக்காவின் கோலின்ஸ் மோதினர். இதில் கிரெஞ்சிகோவா 7-5, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு போட்டியில் லாட்வியாவின் ஆஸ்டபென்கோ, கஜககஸ்தானின் புடின்செவாவை 6-2, 6-3 என வீழ்த்தி, காலிறுதிக்க முன்னேறினார்.
சபாஷ் ஜோகோவிச்
ஆண்கள் ஒற்றையர் நான்காவது சுற்றில் 'நம்பர்-2' வீரர், செர்பியாவின் ஜோகோவிச், 6-3, 6-4, 6-2 என டென்மார்க்கில் ரூனேவை வென்று காலிறுதிக்குள் நுழைந்தார்.