/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்விவிம்பிள்டன்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
விம்பிள்டன்: ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வி
ADDED : ஜூலை 07, 2024 11:54 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் 3வது சுற்றில் போலந்தின் ஸ்வியாடெக் அதிர்ச்சி தோல்வியடைந்தார்.
இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், கஜகஸ்தானின் யூலியா புடின்ட்சேவா மோதினர். இதில் ஏமாற்றிய ஸ்வியாடெக் 6-3, 1-6, 2-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார். டென்மார்க்கின் கரோலின் வோஸ்னியாக்கி 0-6, 1-6 என கஜகஸ்தானின் ரிபாகினாவிடம் அதிர்ச்சி தோல்வியடைந்தார். உக்ரைனின் எலினா ஸ்விடோலினா 6-1, 7-6 என துனிசியாவின் ஆன்ஸ் ஜபீரை தோற்கடித்தார்.
ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-2' செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 4-6, 6-3, 6-4, 7-6 என்ற கணக்கில் ஆஸ்திரேலியாவின் அலெக்சி பாபிரினை வீழ்த்தினார். மற்றொரு 3வது சுற்றில் அமெரிக்காவின் பென் ஷெல்டன், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ் மோதினர். மூன்று மணி நேரம், 5 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஷெல்டன் 6-7, 6-2, 6-4, 4-6, 6-2 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.