ADDED : ஜூன் 19, 2024 10:46 PM

லண்டன்: ஏ.டி.பி., டென்னிஸ் தொடரின் காலிறுதிக்கு போபண்ணா ஜோடி முன்னேறியது.
இங்கிலாந்தின் லண்டனில் ஆண்களுக்கான ஏ.டி.பி., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இத்தொடரின் 'நம்பர்-1' அந்தஸ்து பெற்ற இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டன் ஜோடி, ஆஸ்திரியாவின் லுகாஸ் மைல்டர், அலெக்சாண்டர் எர்லெர் ஜோடியை எதிர்கொண்டது.
முதல் செட்டை போபண்ணா ஜோடி 6-4 என கைப்பற்றியது. தொடர்ந்து சிறப்பாக செயல்பட, அடுத்த செட்டையும் 6-4 என வசப்படுத்தியது. 57 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் போபண்ணா ஜோடி 6-4, 6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.