/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/சுமித் நாகல் 'நம்பர்-71' * டென்னிஸ் தரவரிசையில்...சுமித் நாகல் 'நம்பர்-71' * டென்னிஸ் தரவரிசையில்...
சுமித் நாகல் 'நம்பர்-71' * டென்னிஸ் தரவரிசையில்...
சுமித் நாகல் 'நம்பர்-71' * டென்னிஸ் தரவரிசையில்...
சுமித் நாகல் 'நம்பர்-71' * டென்னிஸ் தரவரிசையில்...
ADDED : ஜூன் 17, 2024 10:56 PM

புதுடில்லி: சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் சுமித் நாகல், முதன் முறையாக 71வது இடத்துக்கு முன்னேறினார்.
சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் புதிய தரவரிசை பட்டியல் வெளியானது. இந்தியாவின் சுமித் நாகல், 6 இடம் முன்னேறி, முதன் முறையாக 71 வது இடம் பிடித்தார். கடந்த வாரம் 77 வது இடத்தில் இருந்த இவர், இத்தாலியில் நடந்த சாலஞ்சர் தொடரில் பைனலுக்கு முன்னேறியதை அடுத்து, 777 புள்ளிகள் பெற, இந்த முன்னேற்றம் கிடைத்தது. ஒற்றையரில் இது இவரது சிறந்த தரவரிசையாக அமைந்தது.
நேரடி தகுதி
ஆண்டு துவக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் 2வது சுற்று, சமீபத்திய பிரெஞ்ச் ஓபனில் முதல் சுற்றுடன் திரும்பினார் சுமித் நாகல் 26. இந்த இரு கிராண்ட்ஸ்லாம் தொடரில் தகுதிச்சுற்றில் பங்கேற்று, பின் பிரதான சுற்றுக்குள் நுழைந்தார். தற்போது தரவரிசை முன்னேற்றத்தை அடுத்து ஜூலை 1ல் லண்டனில் துவங்கவுள்ள விம்பிள்டன் தொடரில், நேரடியாக முதல் சுற்றில் பங்கேற்க காத்திருக்கிறார். தவிர பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா சார்பில் ஒற்றையர் பிரிவிலும் பங்கேற்க உள்ளார்.
ஸ்ரீராம் பாலாஜி '67'
ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 34, 5 இடம் முன்னேறி, 62 வது இடம் பிடித்தார். போபண்ணா 4வது, யூகி பாம்ப்ரி 51வது இடங்களில் உள்ளனர்.