/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/விம்பிள்டன்: கடின பிரிவில் சுமித் நாகல்விம்பிள்டன்: கடின பிரிவில் சுமித் நாகல்
விம்பிள்டன்: கடின பிரிவில் சுமித் நாகல்
விம்பிள்டன்: கடின பிரிவில் சுமித் நாகல்
விம்பிள்டன்: கடின பிரிவில் சுமித் நாகல்
ADDED : ஜூன் 28, 2024 10:26 PM

லண்டன்: விம்பிள்டன் டென்னிசில் கடின பிரிவில் இடம் பெற்றுள்ளார் சுமித் நாகல்.
இங்கிலாந்தின் லண்டனில் விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் ஜூலை 1-14ல் நடக்கவுள்ளது. இதற்கான 'டிரா' வெளியானது. இந்தியாவின் சுமித் நாகல் ('நம்பர்-72') முதன் முறையாக ஒற்றையர் பிரிவில் நேரடியாக களமிறங்குகிறார்.
முதல் சுற்றில் உலகின் 53வது இடத்திலுள்ள செர்பியாவின் மியோமிர் கெச்மனோவிச்சை சந்திக்க உள்ளார். ஒருவேளை இதில் வென்றால், இரண்டாவது சுற்றில் 'நம்பர்-26' வீரர் நெதர்லாந்தின் கிரியக்ஸ்புரை எதிர் கொள்ள வேண்டும்.
முன்னதாக ஆண்டின் துவக்கத்தில் நடந்த ஆஸ்திரேலிய ஓபன் தொடர் முதல் சுற்றில், 31வது இடத்தில் இருந்த அலெக்சாண்டரை (கஜகஸ்தான்) வென்றார். கிராண்ட்ஸ்லாம் அரங்கில் 35 ஆண்டுக்குப் பின், உலகத் தரவரிசையில் இருந்த வீரரை சாய்த்த இந்தியர் ஆனார். இதுபோல விம்பிள்டனில் சாதிக்கலாம்.
மற்றபடி இந்தியாவின் போபண்ணா-மாத்யூ எப்டென் (ஆஸி.,), ஸ்ரீராம் பாலாஜி-ஜான்சன் (பிரிட்டன்) ஜோடி ஆண்கள் இரட்டையரில் களமிறங்க உள்ளன.