/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்
பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்
பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்
பாரிஸ் ஒலிம்பிக்கில் சுமித் நாகல் * ஒற்றையர் பிரிவில் பங்கேற்கிறார்
ADDED : ஜூன் 10, 2024 11:07 PM

ஹெய்ல்புரோன்: சாலஞ்சர் டென்னிஸ் தொடரில் கோப்பை வென்றார் இந்தியாவின் சுமித் நாகல். இதையடுத்து தரவரிசையில் முன்னேறிய இவர், பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பு பெற உள்ளார்.
ஜெர்மனியில் ஆண்களுக்கான சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் 'நம்பர்-95' வது இடத்தில் இருந்த இந்தியாவின் சுமித் நாகல், சுவிட்சர்லாந்தின் அலெக்சாண்டர் ரிட்ஸ்சர்டு ('நம்பர்-184') மோதினர்.
2 மணி நேரம், 42 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் சுமித் நாகல் 6-1, 6-7, 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றார். ஏ.டி.பி., அரங்கில் இவர் வென்ற 6வது கோப்பை இது.
இதையடுத்து வெளியான தரவரிசை பட்டியலில், 713 புள்ளி பெற்று, 18 இடங்கள் முன்னேறிய சுமித் நாகல், 77 வது இடத்தில் உள்ளார். ஒற்றையரில் இது இவரது சிறந்த தரவரிசையாக அமைந்தது.
ஒலிம்பிக் தகுதி
டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் 'டாப்-56' இடத்திலுள்ள வீரர், வீராங்கனைகள் பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்க நேரடியாக தகுதி பெறுவர். அதேநேரம் ஒரு நாட்டில் இருந்து 4 பேர் பங்கேற்க முடியும். இதனால் தரவரிசையில் பின்தங்கியவர்களுக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
இதன் அடிப்படையில் இந்தியாவின் சுமித் நாகல், பாரிஸ் ஒலிம்பிக் ஒற்றையர் பிரிவில் பங்கேற்க உள்ளார். இதுகுறித்து சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பு, இந்திய டென்னிஸ் சங்கத்திடம் முறைப்படி நாளை தெரிவிக்கும். பின் ஜூன் 19ல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
சோம்தேவுக்கு அடுத்து...
ஒலிம்பிக் ஒற்றையர் டென்னிசில் பிரிவில் பங்கேற்கும் இரண்டாவது வீரர் ஆகிறார் சுமித் நாகல் 27. முன்னதாக 2012, லண்டன் ஒலிம்பிக்கில் சோம்தேவ் தேவ்வர்மன், 'வைல்டு கார்டு' (சிறப்பு அனுமதி) முறையில் விளையாடினார்.
ஸ்ரீராம் பாலாஜி '67'
ஆண்கள் இரட்டையர் தரவரிசையில் தமிழக வீரர் ஸ்ரீராம் பாலாஜி 34, 17 இடம் முன்னேறி, 67 வது இடத்தில் உள்ளார். இது இவரது சிறந்த தரவரசையாக உள்ளது. முன்னதாக 71வது இடத்தில் இருந்தார்.