/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/டென்னிஸ் தரவரிசை: சின்னர் 'நம்பர்-1'டென்னிஸ் தரவரிசை: சின்னர் 'நம்பர்-1'
டென்னிஸ் தரவரிசை: சின்னர் 'நம்பர்-1'
டென்னிஸ் தரவரிசை: சின்னர் 'நம்பர்-1'
டென்னிஸ் தரவரிசை: சின்னர் 'நம்பர்-1'
ADDED : ஜூன் 10, 2024 10:36 PM

பாரிஸ்: ஏ.டி.பி., டென்னிஸ் தரவரிசையில் இத்தாலியின் சின்னர் முதன்முறையாக 'நம்பர்-1' இடம் பிடித்தார்.
டென்னிஸ் போட்டியில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கான தரவரிசை பட்டியலை ஏ.டி.பி., வெளியிட்டது. ஒற்றையர் பிரிவில் இத்தாலியின் ஜானிக் சின்னர், 9525 புள்ளிகளுடன் 2வது இடத்தில் இருந்து முதன்முறையாக 'நம்பர்-1' இடத்துக்கு முன்னேறினார். இதன்மூலம் 1973ல் கணினிமயமாக்கப்பட்ட தரவரிசை அறிமுகமான பின், 'நம்பர்-1' இடம் பிடித்த முதல் இத்தாலி வீரரானார். இந்த ஆண்டு ஆஸ்திரேலிய ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற இவர், பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதி வரை சென்றிருந்தார்.
பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ் (8580 புள்ளி) 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். இத்தொடரில் காயத்தால் காலிறுதியில் பங்கேற்காமல் வெளியேறிய செர்பியாவின் நோவக் ஜோகோவிச் (8360) முதலிடத்தில் இருந்து மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். பைனல் வரை சென்ற ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் (6885) 4வது இடத்தை தக்கவைத்துக் கொண்டார்.
ஸ்வியாடெக் 'நம்பர்-1'
பிரெஞ்ச் ஓபன் ஒற்றையரில் 'ஹாட்ரிக்' பட்டம் வென்ற போலந்து வீராங்கனை ஸ்வியாடெக், டபிள்யு.டி.ஏ., ஒற்றையர் தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். அரையிறுதி வரை சென்ற அமெரிக்காவின் கோகோ காப், 3வது இடத்தில் இருந்து 2வது இடத்துக்கு முன்னேறினார். பெலாரசின் அரினா சபலென்கா, 2வது இடத்தில் இருந்து 3வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
பைனல் வரை சென்ற இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி, 15வது இடத்தில் இருந்து முதன்முறையாக 7வது இடத்துக்கு முன்னேறினார்.