/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/நடால்-அல்காரஸ் பங்கேற்பு: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்...நடால்-அல்காரஸ் பங்கேற்பு: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்...
நடால்-அல்காரஸ் பங்கேற்பு: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்...
நடால்-அல்காரஸ் பங்கேற்பு: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்...
நடால்-அல்காரஸ் பங்கேற்பு: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிசில்...
ADDED : ஜூன் 12, 2024 10:23 PM

மாட்ரிட்: பாரிஸ் ஒலிம்பிக் டென்னிஸ் இரட்டையரில் ஸ்பெயினின் நடால், அல்காரஸ் ஜோடி பங்கேற்கிறது.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஒலிம்பிக் போட்டி (ஜூலை 26 - ஆக. 11) நடக்கவுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள டென்னிஸ் போட்டிக்கான ஸ்பெயின் ஆண்கள் அணி அறிவிக்கப்பட்டது. இரட்டையரில் ஸ்பெயின் சார்பில் ரபெல் நடால் 38, கார்லஸ் அல்காரஸ் 21, ஜோடி களமிறங்குகிறது. இதுவரை 22 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ள நடால், ஒலிம்பிக்கில் இரு முறை தங்கம் (2008ல் ஒற்றையர், 2016ல் இரட்டையர்) வென்றுள்ளார். சமீபத்தில் முடிந்த பிரெஞ்ச் ஓபனில் கோப்பை வென்ற அல்காரஸ், முதன்முறையாக ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார். இளம், அனுபவ கூட்டணி பாரிஸ் ஒலிம்பிக்கில் சாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இவர்களை தவிர, டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற பாப்லோ கரேனோ புஸ்டா, டேவிடோவிச், கிரானோலர்ஸ் ஆகியோர் ஸ்பெயின் அணிக்கு தேர்வாகினர்.
ஸ்பெயின் கேப்டன் டேவிட் பெரர் கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக் இரட்டையரில் நடால்-அல்காரஸ் ஜோடி விளையாடும்,'' என்றார்.