ADDED : ஜூன் 12, 2024 10:33 PM

பெருகியா: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு இந்தியாவின் சுமித் நாகல் முன்னேறினார்.
இத்தாலியில், ஆண்களுக்கான ஏ.டி.பி., பெருகியா சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் போஸ்னியாவின் நெர்மன் பேடிக்கை வீழ்த்திய இந்தியாவின் சுமித் நாகல், இரண்டாவது சுற்றில் இத்தாலியின் அலெஸ்சான்ட்ரோ ஜியானெசியை எதிர்கொண்டார்.
முதல் செட்டை 0-6 என இழந்த சுமித் நாகல், பின் எழுச்சி கண்டு இரண்டாவது செட்டை 7-5 என போராடி கைப்பற்றினார். 'டை பிரேக்கர்' வரை நீடித்த வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டில் மீண்டும் அசத்திய இவர் 7-6 என தன்வசப்படுத்தினார். முடிவில் சுமித் நாகல் 0-6, 7-5, 7-6 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.