/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/ராஷ்மிகா, ருடுஜா கலக்கல் * மும்பை டென்னிசில்...ராஷ்மிகா, ருடுஜா கலக்கல் * மும்பை டென்னிசில்...
ராஷ்மிகா, ருடுஜா கலக்கல் * மும்பை டென்னிசில்...
ராஷ்மிகா, ருடுஜா கலக்கல் * மும்பை டென்னிசில்...
ராஷ்மிகா, ருடுஜா கலக்கல் * மும்பை டென்னிசில்...
ADDED : பிப் 06, 2024 09:51 PM

மும்பை: மும்பை சாலஞ்சர் டென்னிசின் இரண்டாவது சுற்றுக்கு இந்தியாவின் ராஷ்மிகா, ருடுஜா முன்னேறினர்.
இந்தியாவின் மும்பையில் பெண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. உலகத் தரவரிசையில் 250 வது இடத்திலுள்ள இந்தியாவின் ஸ்ரீவள்ளி ராஷ்மிகா, தகுதிச்சுற்றில் இருந்து பிரதான சுற்றுக்கு முன்னேறினார். நேற்று நடந்த முதல் சுற்றில் இவர், 93வது இடத்திலுள்ள, இத்தொடரில் 'நம்பர்-2' அந்தஸ்து பெற்ற ஜப்பானின் ஹிபினோவை சந்தித்தார்.
முதல் செட்டை 2-6 என ராஷ்மிகா இழந்தார். பின் அடுத்த செட்டை 6-1 என கைப்பற்றி பதிலடி தந்தார். 'டை பிரேக்கர்' வரை சென்ற மூன்றாவது, கடைசி செட்டை ராஷ்மிகா 7-6 என கைப்பற்றினார். முடிவில் ராஷ்மிகா 2-6, 6-1, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.
மற்றொரு முதல் சுற்றில் இந்தியாவின் ருடுஜா போசாலே, தாய்லாந்தின் பிலிபியுச்சை 6-4, 7-5 என்ற நேர் செட் கணக்கில் சாய்த்து, அடுத்த சுற்றுக்குள் நுழைந்தார். இரட்டையர் பிரிவில் இந்தியாவின் பிரார்த்தனா தாம்ப்ரே, நெதர்லாந்தின் ஹர்டோனோ ஜோடி, 6-4, 2-6, 10-6 என தாய்லாந்தின் லுக்சிகா, பிலிபியுச் ஜோடியை வென்று காலிறுதிக்கு முன்னேறியது.