Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/டென்னிஸ்/காலிறுதியில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

காலிறுதியில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

காலிறுதியில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

காலிறுதியில் ஸ்வியாடெக்: பிரெஞ்ச் ஓபனில் முன்னேற்றம்

ADDED : ஜூன் 02, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் காலிறுதிக்கு போலந்தின் ஸ்வியாடெக், அமெரிக்காவின் கோகோ காப் முன்னேறினர்.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' போலந்தின் இகா ஸ்வியாடெக், ரஷ்யாவின் அனஸ்டாசியா பொடாபோவா மோதினர். அபாரமாக ஆடிய 'நடப்பு சாம்பியன்' ஸ்வியாடெக் 6-0, 6-0 என்ற நேர் செட் கணக்கில் மிகச்சுலபமாக வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் கோகோ காப் 6-1, 6-2 என இத்தாலியின் எலிபெட்டா கோசியாரெட்டோவை தோற்கடித்தார். செக்குடியரசின் மார்கெடா வான்ட்ரவ்சோவா 6-4, 6-2 என செர்பியாவின் ஆல்கா டானிலோவிச்சை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தார்.

ஜோகோவிச் வெற்றி

ஆண்கள் ஒற்றையர் 3வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் லோரென்சோ முசெட்டி மோதினர். இதில் 'நடப்பு சாம்பியன்' ஜோகோவிச் 7-5, 6-7, 2-6, 6-3, 6-0 என போராடி வெற்றி பெற்றார். மற்ற 3வது சுற்று போட்டிகளில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், பல்கேரியாவின் டிமிட்ரோவ் வெற்றி பெற்றனர்.

காலிறுதியில் அல்காரஸ்

ஆண்கள் ஒற்றையர் 4வது சுற்றில் ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், கனடாவின் பெலிக்ஸ் அகுர்-அலியாசிம் மோதினர். அபாரமாக ஆடிய அல்காரஸ் 6-3, 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார். மற்றொரு 4வது சுற்றில் கிரீசின் ஸ்டெபானஸ் சிட்சிபாஸ் 3-6, 7-6, 6-2, 6-2 என இத்தாலியின் மேட்டியோ அர்னால்டியை வென்றார்.

போபண்ணா ஜோடி வெற்றி

ஆண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியாவின் மாத்யூ எப்டென் ஜோடி 7-5, 4-6, 6-4 என பிரேசிலின் ஆர்லாண்டோ லஸ், மார்சிலோ சோர்மன் ஜோடியை வீழ்த்தியது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us