/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தமிழகம் இரண்டு வெள்ளி * தேசிய சீனியர் தடகளத்தில்...தமிழகம் இரண்டு வெள்ளி * தேசிய சீனியர் தடகளத்தில்...
தமிழகம் இரண்டு வெள்ளி * தேசிய சீனியர் தடகளத்தில்...
தமிழகம் இரண்டு வெள்ளி * தேசிய சீனியர் தடகளத்தில்...
தமிழகம் இரண்டு வெள்ளி * தேசிய சீனியர் தடகளத்தில்...
ADDED : ஜூன் 29, 2024 10:07 PM

பஞ்ச்குலா: தேசிய தடகள சாம்பியன்ஷிப் 'ரிலே' ஓட்டத்தில் தமிழக அணிக்கு இரண்டு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
ஹரியானாவில், மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் நடக்கிறது. ஆண்களுக்கான 4x400 மீ., ரிலே ஓட்டம் நடந்தது. தமிழகத்தின் சந்தோஷ், சின்தலா, ஆரோக்கிய ராஜிவ், விஷால் இடம் பெற்ற அணி, 3 நிமிடம், 08:62 வினாடி நேரத்தில் வந்து வெள்ளிப்பதக்கம் வென்றது.
ஹரியானாவின் அபிஷேக், அதுல், விக்ராந்த், மோகித் இடம் பெற்ற அணி (3 நிமிடம், 08:00 வினாடி) முதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது.
ஆண்களுக்கான 4x100 மீ., ரிலே ஓட்டத்தில் தமிழகத்தின் அருண், நிதின், ராகுல் குமார், சசிசித்தார்த் அடங்கிய அணி, 40.88 வினாடி நேரத்தில் வந்து வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. ஒடிசா (40.02), பஞ்சாப் (40.50) அணிகள் தங்கம், வெள்ளிப்பதக்கம் கைப்பற்றின.
பெண்களுக்கான 4x100 மீ., ரிலே ஓட்டம் நடந்தது. இதில் தமிழகத்தின் நித்யா, பகவதி, பவித்ரா, ரவி இடம் பெற்ற அணி 45.40 வினாடி நேரத்தில் வந்து, வெள்ளிப்பதக்கம் கைப்பற்றியது. கர்நாடகா (45.38), ஒடிசா (46.65) அணிகள் தங்கம், வெண்கலம் வென்றன.
பெண்களுக்கான 400 மீ., தடை ஓட்டத்தின் பைனலுக்கு தமிழகத்தின் திவ்யா, ஒலிம்பா ஸ்டெபி தகுதி பெற்றனர். 110 மீ., தடை ஓட்டத்தின் பைனலுக்கு தமிழகத்தின் மானவ், நிஷாந்த்ராஜா, தனுஷ் ஆதித்தன் தகுதி பெற்றனர். பெண்களுக்கான 110 மீ., தடை ஓட்டத்தில் நித்யா, நந்தினி, ஸ்ரீரேஷ்மா பைனலுக்கு முன்னேறினர்.