/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/ஹாக்கியில் 35 கோல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்ஹாக்கியில் 35 கோல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ஹாக்கியில் 35 கோல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ஹாக்கியில் 35 கோல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ஹாக்கியில் 35 கோல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 29, 2024 10:14 PM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்சஸ் நகரில் (1932, ஜூலை 30 - ஆக. 14) 10வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. முதல் மூன்று இடம் பிடித்தவர்களுக்கு பதக்கம் வழங்க, வெற்றி மேடை அறிமுகம் செய்யப்பட்டது. வீரர்கள் தங்குவதற்கு ஒலிம்பிக் கிராமம் கட்டப்பட்டது.
கோல் மழை
ஹாக்கியில் இந்தியா, ஜப்பான், அமெரிக்கா மட்டுமே பங்கேற்றன. முதல் போட்டியில் இந்திய அணி, ஜப்பானை 11--1 என்ற கோல் கணக்கில் வென்றது. அடுத்து அமெரிக்காவை 24--1 என வீழ்த்தி சாதனை படைத்தது. இதில் தயான் சந்த் 8, அவரது சகோதரர் ரூப் சிங் 10 கோல் அடித்தனர். இத்தொடரில் இந்தியா அடித்த 35 கோல்களில் தயான் சந்த், ரூப் சிங் சகோதரர்கள் மட்டும் 25 கோல்கள் அடித்தனர். இவர்களது அசத்தல் ஆட்டம் கைகொடுக்க, இந்தியா மீண்டும் தங்கம் வென்றது.
சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்திய அமெரிக்கா 44 தங்கம், 36 வெள்ளி, 30 வெண்கலம் என 110 பதக்கங்கள் கைப்பற்றி முதலிடத்தை தட்டிச் சென்றது. அடுத்த இரு இடங்களை இத்தாலி (12 தங்கம், 12 வெள்ளி, 12 வெண்கலம்), பிரான்ஸ் (11 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம்) கைப்பற்றின. இப்பட்டியலில் இந்தியாவுக்கு (ஒரு தங்கம்) 19வது இடம் கிடைத்தது.