/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/தங்க மழையில் பெல்ப்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்தங்க மழையில் பெல்ப்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
தங்க மழையில் பெல்ப்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
தங்க மழையில் பெல்ப்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
தங்க மழையில் பெல்ப்ஸ்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 24, 2024 10:43 PM

அமெரிக்க நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் 39. தனது 15வது வயதில் சிட்னி ஒலிம்பிக்கில் (2000) முதன் முறையாக பங்கேற்றார். பின் 2004ல் ஏதென்சில் நடந்த போட்டியில் 200 மீ., 'பிரீஸ்டைல்', 100 மீ., 'பட்டர்பிளை', 200 மீ., தனிநபர் 'மெட்லே', 400 மீ., தனிநபர் 'மெட்லே', 800 மீ.. 'பிரீஸ்டைல் ரிலே', மற்றும் 400 மீ., 'மெட்லே ரிலே' ஆகிய 6 பிரிவுகளில் தங்கம் வென்று சாதனை படைத்தார். 200 மீ., 'பிரீஸ்டைல்', 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவுகளில் மட்டும் வெண்கலம் வென்றார். மொத்தம் 8 பதக்கங்களை நீச்சலில் ஒருவர் பெற்றது இதுவே முதல் முறை.
நான்கு ஆண்டுகளுக்கு பின் பீஜிங் ஒலிம்பிக்கில் (2008) அசத்திய பெல்ப்ஸ், 8 பிரிவுகளிலும் தங்கம் வென்றார். அதன்பின் 2012ல் நடந்த லண்டன் ஒலிம்பிக்கிலும் சிறப்பாக செயல்பட்ட இவர் 4 தங்கம், 2 வெள்ளி என 6 பதக்கங்களை அள்ளினார். இதன்மூலம் ஒட்டுமொத்த ஒலிம்பிக் வரலாற்றில் அதிக பதக்கம் (22) வென்றவர்கள் பட்டியலில் சோவியத் யூனியனின் ஜிம்னாஸ்டிக்ஸ் வீராங்கனை லாரிசா லட்னினாவை (18 பதக்கம்) முந்தி முதலிடம் பிடித்து புதிய சாதனை படைத்தார்.
பிரேசிலில் நடந்த ரியோ ஒலிம்பிக்கில் (2016) தனது ஆதிக்கத்தை தொடர்ந்த பெல்ப்ஸ், 5 தங்கம், ஒரு வெள்ளி என 6 பதக்கம் வென்றார். கடந்த 2016ல் ஓய்வை அறிவித்த இவர், ஒலிம்பிக் அரங்கில் அதிக பதக்கம் வென்றவர்கள் வரிசையில் முதலிடத்தில் நீடிக்கிறார். நான்கு ஒலிம்பிக்கில் (2004--16) 23 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 28 பதக்கங்கள் வென்றுள்ளார்.