Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வில்வித்தை: இந்திய அணிகள் அபாரம்

வில்வித்தை: இந்திய அணிகள் அபாரம்

வில்வித்தை: இந்திய அணிகள் அபாரம்

வில்வித்தை: இந்திய அணிகள் அபாரம்

ADDED : ஜூலை 25, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
பாரிஸ்: ஒலிம்பிக் போட்டி முறைப்படி இன்று துவங்குகிறது. இதற்கு முன்பாக நேற்று வில்வித்தை தரவரிசை போட்டி நடந்தது. பெண்கள் தனிநபர் பிரிவில் இந்தியாவின் அன்கிதா (666 புள்ளி) 11வது இடம் பிடித்தார். பஜன் கவுர் (659) 22, தீபிகா குமாரி (658) 23வது இடம் பிடித்தனர். தென் கொரியாவின் லிம் ஷியோன், 694/700 புள்ளி எடுத்து உலக சாதனை படைத்தார்.

மொத்தம் 1983 புள்ளியுடன் இந்திய அணி, 4வது இடம் (மொத்தம் 12 அணி) பிடித்து, நேரடியாக காலிறுதிக்கு முன்னேறியது.

* ஆண்கள் பிரிவில் இந்தியாவின் திராஜ் பொம்மதேவரா, 681 புள்ளி எடுத்து 4வது இடம் பிடித்தார். தருண்தீப் ராய் (674) 14, பிரவின் ஜாதவ் (658) 39வது இடம் பிடித்தனர். மொத்தம் 2013 புள்ளியுடன் இந்திய ஆண்கள் அணி, 3வது இடம் பிடித்து, நேரடியாக காலிறுதிக்குள் நுழைந்தது.

* கலப்பு அணிகள் பிரிவில் இந்தியாவின் அன்கிதா, திராஜ் ஜோடி 1347 புள்ளியுடன் ஐந்தாவது இடம் பெற்றது.

களத்தில் பார்க்கலாம்

இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் இரண்டு பதக்கம் வென்ற முதல் வீராங்கனை சிந்து (பாட்மின்டன்). 2016 (வெள்ளி), 2021ல் (வெண்கலம்) அசத்திய சிந்து, 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்ல காத்திருக்கிறார். அவர் கூறுகையில்,'' ஒவ்வொரு முறை களமிறங்கும் போதும், இது தான் எனது முதல் ஒலிம்பிக் என்ற எண்ணத்தில் விளையாடி, பதக்கம் வெல்ல விரும்புவேன். ஏற்கனவே இரு பதக்கம் வென்றேன். இம்முறை 'ஹாட்ரிக்' பதக்கம் வெல்ல முடியும் என நம்புகிறேன்,'' என்றார்.

ஹர்மீத் தேசாய் நம்பிக்கை

ஒலிம்பிக் டேபிள் டென்னிசில் இந்திய ஆண், பெண்கள் அணிகள் முதன் முறையாக பங்கேற்கின்றன. இதுகுறித்து இந்திய வீரர் ஹர்மீத் தேசாய் 31, கூறுகையில்,''போட்டி நடக்கும் தினம், எங்களது நாளாக அமைந்து விட்டால் போதும், உலகின் எந்த அணியையும் எங்களால் வீழ்த்த முடியும்,'' என நம்பிக்கை தெரிவித்தார்.



கடின பிரிவில் சுமித் நாகல்

டென்னிஸ் போட்டி நாளை துவங்குகிறது. இந்திய வீரர் சுமித் நாகல் (80 வது இடம்), முதல் சுற்றில் பிரான்சின் கோரென்டின் மவுடெட்டுடன் (68வது) மோதுகிறார். இதில் வென்றால் 2வது சுற்றில் 'நம்பர்-6' வீரர் அலெக்ஸ் டி மினாரை (ஆஸி.,) சந்திக்க வேண்டும். 24 கிராண்ட்ஸ்லாம் கோப்பை வென்ற ஜோகோவிச், இரண்டாவது சுற்றில் 22 பட்டம் வென்ற, ஸ்பெயின் வீரர் நடாலை எதிர்கொள்கிறார்.



சர்ச்சையில் சிக்கிய கனடா

ஒலிம்பிக் பெண்கள் கால்பந்தின் நடப்பு சாம்பியன் கனடா. இம்முறை முதல் போட்டியில் நியூசிலாந்தை (ஜூலை 31) சந்திக்க உள்ளது. இதற்கான பயிற்சியில் ஈடுபட்ட நியூசிலாந்து வீராங்கனைகளை, 'டிரோன்' உதவியால் கனடா சார்பில் கண்காணித்தனர். இதுகுறித்து நியூசிலாந்து தரப்பில் புகார் தரப்பட, கனடா அணி மன்னிப்பு கேட்டது. தவிர கனடா உதவி பயிற்சியாளர் ஜாஸ்மின் உட்பட இருவர், நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர். தற்போது, முதல் போட்டியில் இருந்து கனடா அணி பயிற்சியாளர் பிரைஸ்ட்மேன் விலக முடிவு செய்துள்ளார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us