/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மஞ்சு ராணி 'தங்கம்': தேசிய நடை போட்டியில்மஞ்சு ராணி 'தங்கம்': தேசிய நடை போட்டியில்
மஞ்சு ராணி 'தங்கம்': தேசிய நடை போட்டியில்
மஞ்சு ராணி 'தங்கம்': தேசிய நடை போட்டியில்
மஞ்சு ராணி 'தங்கம்': தேசிய நடை போட்டியில்
UPDATED : ஜன 31, 2024 07:00 PM
ADDED : ஜன 31, 2024 06:58 PM

சண்டிகர்: தேசிய நடை போட்டியில் பஞ்சாப் வீராங்கனை மஞ்சு ராணி தங்கம் வென்றார்.
சண்டிகரில் தேசிய ஓபன் நடை போட்டி சாம்பியன்ஷிப் நடக்கிறது. சீனியர் பெண்களுக்கான 10 கி.மீ., போட்டியில் இலக்கை 45 நிமிடம், 20.00 வினாடியில் கடந்த பஞ்சாப்பின் மஞ்சு ராணி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இவர், 20 கி.மீ., போட்டியிலும் தங்கம் வென்றிருந்தார். கடந்த ஆண்டு சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு 35 கி.மீ., கலப்பு இரட்டையர் போட்டியில் ராம் பாபுவுடன் இணைந்து வெண்கலம் கைப்பற்றினார். இதுகுறித்து மஞ்சு ராணி கூறுகையில், ''பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்பதே இலக்கு. குறிப்பாக கலப்பு இரட்டையர் போட்டி மீது கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன்,'' என்றார்.
ஆண்களுக்கான 10 கி.மீ., நடை போட்டியில் பந்தய துாரத்தை 39 நிமிடம், 25.00 வினாடியில் கடந்த பஞ்சாப் மாநிலம் பாட்யாலாவை சேர்ந்த சாஹில் 22, முதலிடம் பிடித்து தங்கத்தை தட்டிச் சென்றார். இவர், 20 கி.மீ., நடை போட்டியில் 5வது இடம் பிடித்திருந்தார். அடுத்த இரு இடங்களை உத்தரகாண்ட்டின் பரம்ஜீத் சிங் பிஷ்ட் (39 நிமிடம், 36.00 வினாடி), டில்லியின் விகாஷ் சிங் (39 நிமிடம், 47.00 வினாடி) கைப்பற்றினர்.
ஆண்கள், பெண்களுக்கான 35 கி.மீ., நடை போட்டியில் முறையே கோவாவின் விஜய் ஓம்கர் விஷ்வகரம் (2 மணி நேரம், 39 நிமிடம், 19 வினாடி), உத்தர பிரதேசத்தின் பந்தனா படேல் (3 மணி நேரம், 11 நிமிடம், 06.00 வினாடி) தங்கம் வென்றனர்.