/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/அழுதார் மில்கா சிங்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்அழுதார் மில்கா சிங்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
அழுதார் மில்கா சிங்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
அழுதார் மில்கா சிங்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
அழுதார் மில்கா சிங்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 22, 2024 11:05 PM

ஒலிம்பிக் தடகளத்தில் இந்தியாவுக்கு பெருமை சேர்த்தார் மில்கா சிங். மின்னல் வேகத்தில் ஓடும் திறன் பெற்ற இவர் 'பறக்கும் சீக்கியர்' என்று அழைக்கப்பட்டார். இந்திய ராணுவத்தில் பணியாற்றினார். இத்தாலி தலைநகர் ரோமில் 1960ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் முதல் முறையாக கலந்து கொண்டார். 400 மீ., ஓட்டத்தில் பங்கேற்ற மில்கா சிங் நான்காவதாக (45.6 வினாடி) வந்தார். 0.1 வினாடி வித்தியாசத்தில் வெண்கலப்பதக்கத்தை பறிகொடுத்தார்.
இது குறித்து அப்போது மில்கா கூறுகையில், ''இந்தியா, பாகிஸ்தான் பிரிவினையின் போது எனது பெற்றோரை இழந்த சம்பவத்துக்குப் பின், என்னை அதிகம் பாதித்த நிகழ்ச்சி அதுதான். குறைந்த நேரம் வித்தியாசம் என்பதால் வெண் கலப்பதக்கம் யாருக்கு என்ற அறிவிப்பு சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது ஏற்பட்ட 'டென்ஷன்' வாழ்வில் எப்போதும் மறக்காது. பதக்கம் எனக்கில்லை என தெரிந்ததும், நீண்ட நாட்கள் அழுதேன்,'' என்றார்.
மிரட்டிய மாரத்தான்:கடந்த 1996ல் அட்லான்டா ஒலிம்பிக்கில் பங்கேற்பதற்கு முன்பாக தென் ஆப்ரிக்க வீரர் ஜோஸியா தக்வானே வாழ்வில் பயங்கர சம்பவம் நடந்தது. 'டிரக்' வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது கொள்ளையர்கள் சுட, முகத்தில் லேசான காயத்துடன் தப்பினார். பின் மாரத்தானில் பங்கேற்று தங்கம் வென்றார். படிப்பறிவு இல்லாத இவருக்கு தங்கம் தருவார்கள் என்பது தெரியாதாம். பின் அதிகாரிகள் விஷயத்தை சொல்ல, தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொண்டாராம்.