/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3
வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3
வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3
வெண்கலம் வென்ற மல்லேஸ்வரி * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 3
ADDED : ஜூலை 23, 2024 11:13 PM

ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கு சொந்தக்காரர் கர்ணம் மல்லேஸ்வரி 49. ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தை சேர்ந்த இவர், 12 வயதில் பளுதுாக்கும் பயிற்சியை துவக்கினார். இவரை 'இரும்பு பெண்மணி' என்று அழைப்பர். உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 4 பதக்கம் (1994, 1995ல் தங்கம், 1993, 1996ல் வெண்கலம்) வென்ற இவர், ஆசிய விளையாட்டில் இரண்டு வெள்ளி (1994, 1998) கைப்பற்றினார்.
2000ல் நடந்த சிட்னி ஒலிம்பிக் போட்டிக்கு முன் பல்வேறு சோதனைகளை சந்தித்தார். இவரது உணவுப்பழக்கம் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இதனை கண்டுகொள்ளாத இவர், பளுதுாக்குதலில் (69 கி.கி.,) வெண்கலப்பதக்கம் வென்று சாதித்தார். தொடர்ந்து 2004ல் ஏதென்ஸ் ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இவரால் பதக்கம் பெற இயலவில்லை. நாட்டின் உயரிய அர்ஜுனா (1994), கேல் ரத்னா (1995--96), பத்மஸ்ரீ (1999) விருது வென்றுள்ளார்.