ADDED : ஜூன் 16, 2025 10:55 PM

லண்டன்: சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் லண்டனில் கிளப் அணிகளுக்கான சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. மொத்தம் 52 அணிகள் பங்கேற்றன. இதன் ரேபிட் பிரிவில் இந்தியாவின் புனேயை சேர்ந்த எம்.ஜி.டி.1 அணி, சாம்பியன் பட்டம் வென்றது.
இதில் இந்தியாவின் 'நம்பர்-1' வீரர் அர்ஜுன், பிரனவ், மெடோன்கா, அதர்வா உள்ளிட்டோர் இடம் பெற்றிருந்தனர். ஒட்டுமொத்தமாக பங்கேற்ற 12 போட்டியில் 10 ல் வெற்றி பெற்றது. ஒரு 'டிரா', ஒரு தோல்வியுடன் 21 புள்ளி பெற்று, முதலிடம் பிடித்து அசத்தியது.
இந்தியாவின் திவ்யா, விதித் குஜ்ராத்தி உள்ளிட்டோர் இடம் பெற்ற ஹெக்சமெண்டு (20), செஸ் ஜாம்பவான் இந்தியாவின் ஆனந்த், சர்பர்த்தோ மணி உள்ளிட்டோர் இடம் பிடித்த பிரீடம் (17) அணிகள் அடுத்த இரு இடம் பிடித்தன.