Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கூடைப்பந்து: இந்தியா தகுதி

கூடைப்பந்து: இந்தியா தகுதி

கூடைப்பந்து: இந்தியா தகுதி

கூடைப்பந்து: இந்தியா தகுதி

ADDED : ஜூன் 16, 2025 10:58 PM


Google News
Latest Tamil News
புதுடில்லி: மங்கோலியாவில் ஆசிய கூடைப்பந்து தொடர் (16 வயதுக்குட்பட்ட) நடக்க உள்ளது. இதற்கான தகுதிச்சுற்று மாலத்தீவில் நடந்தது. ஆண்கள் பிரிவில் இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு, இலங்கை அணிகள் இடம் பெற்றன. லீக் சுற்றில் வங்கதேசம் (117-29), மாலத்தீவு (151-20), இலங்கை (111-79) என பங்கேற்ற 4 அணிகளையும் வென்றது இந்தியா. பைனலில் இந்தியா, இலங்கை மோதின. இதில் 94-62 என வெற்றி பெற்ற இந்தியா, ஆசிய தொடருக்கு தகுதி பெற்றது.

பெண்கள் பிரிவு லீக் சுற்றில் இந்திய அணி, இலங்கை (104-38), வங்கதேசம் (137-13), மாலத்தீவை (136-21) வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறியது. அடுத்து நடந்த பைனலில் இந்தியா-இலங்கை மீண்டும் மோதின. இந்திய அணி 103-52 என்ற கணக்கில் வெற்றி பெற்று, ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்க தகுதி பெற்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us