/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/கார்ல் லூயிஸ் அசத்தல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்கார்ல் லூயிஸ் அசத்தல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கார்ல் லூயிஸ் அசத்தல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கார்ல் லூயிஸ் அசத்தல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
கார்ல் லூயிஸ் அசத்தல்: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூலை 10, 2024 10:07 PM

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், 23வது ஒலிம்பிக் போட்டி (1984, ஜூலை 28 - ஆக. 12) நடந்தது. இதில் 140 நாடுகளை சேர்ந்த 6800 பேர் (5231 வீரர், 1569 வீராங்கனைகள்) பங்கேற்றனர். மாஸ்கோ ஒலிம்பிக்கை அமெரிக்கா புறக்கணித்ததற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, சோவியத் யூனியன், அதன் நட்பு நாடுகள் லாஸ் ஏஞ்சல்ஸ் போட்டியை புறக்கணித்தன.
அசத்தலான வாத்திய குழுக்களின் இசையுடன் அப்போதைய ஜனாதிபதி ரொனால்டு ரீகன், போட்டியை துவக்கி வைத்தார். அமெரிக்கா 83 தங்கம் உட்பட 174 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது. ஆண்களுக்கான ஹாக்கியில் ஏமாற்றிய இந்தியா, லீக் சுற்றோடு வெளியேறியது.
ஒலிம்பிக் அரங்கில் அமெரிக்க வீரரான கார்ல் லூயிசின் ஆதிக்கம் ஆரம்பமானது. 100, 200 மீ., ஓட்டம், 4x100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதலில் அசத்திய லுாயில், நான்கு தங்கம் கைப்பற்றினார். இதன்மூலம் ஒரே ஒலிம்பிக்கில் நான்கு தங்கம் வென்ற சக நாட்டு தடகள வீரரான ஜெசி ஓவன்ஸ் சாதனையை சமன் செய்தார். 1936ல் பெர்லினில் நடந்த ஒலிம்பிக்கில் ஓவன்சும் 100, 200 மீ., ஓட்டம், 4x100 மீ., தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல் என 4 தங்கம் வென்றிருந்தார்.