/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/மெர்லின் ஆதிக்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 18மெர்லின் ஆதிக்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 18
மெர்லின் ஆதிக்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 18
மெர்லின் ஆதிக்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 18
மெர்லின் ஆதிக்கம் * ஒலிம்பிக் கவுன்ட் டவுண் 18
ADDED : ஜூலை 09, 2024 09:43 PM

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் (1980, ஜூலை 19 - ஆக. 3) 22வது ஒலிம்பிக் போட்டி நடந்தது. ஆப்கானிஸ்தான் மீது சோவியத் யூனியன் போர் தொடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இப்போட்டியை அமெரிக்கா, அதன் நட்பு நாடுகள் புறக்கணித்தன.
பெண்கள் ஹாக்கி அறிமுகமானது. இதில் பங்கேற்ற இந்தியா 4வது இடம் பிடித்தது. ஆண்கள் ஹாக்கியில் எழுச்சி கண்ட இந்தியா, 8வது தங்கத்தை தட்டிச் சென்றது.
மெர்லின் ஜாய்ஸ் ஓட்டே, 200 மீ., ஓட்டத்தில் வெண்கலம் வென்றார். இது தான் ஜமைக்கா வீராங்கனை சார்பில் பெறப்பட்ட முதல் பதக்கம். தொடர்ந்து ஏழு ஒலிம்பிக்கில் கலந்து கொண்ட இவர், 'தடகள ராணியாக' ஜொலித்தார். ஒலிம்பிக்கில் 9 பதக்கம் (3 வெள்ளி, 6 வெண்கலம்) வென்றார். உலக தடகள சாம்பியன்ஷிப் அரங்கில் 14 பதக்கம் (3 தங்கம், 4 வெள்ளி, 7 வெண்கலம்) கைப்பற்றிய இவர், ஜமைக்கா அரசால் சிறந்த வீராங்கனையாக 15 முறை தேர்வானார்.
ரஷ்யா 80 தங்கம் உட்பட 195 பதக்கங்களுடன் முதலிடம் பெற்றது.