/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/'தங்க மகள்' ஓட்டோ: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்'தங்க மகள்' ஓட்டோ: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
'தங்க மகள்' ஓட்டோ: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
'தங்க மகள்' ஓட்டோ: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
'தங்க மகள்' ஓட்டோ: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
UPDATED : ஜூலை 11, 2024 10:58 PM
ADDED : ஜூலை 11, 2024 10:09 PM

தென்கொரிய தலைநகர் சியோலில் 24வது ஒலிம்பிக் போட்டி (1988, செப். 17 - அக். 2) நடந்தது. இதன் துவக்க விழாவில் உலக அமைதிக்காக புறாக்கள் பறக்க விடப்பட்டன. இவற்றில் பல, மைதானத்தில் எரிந்து கொண்டிருந்த ஒலிம்பிக் ஜோதியின் பக்கம் செல்ல, உயிரோடு பரிதாபமாக கருகின. இதற்கு பின் நடந்த ஒலிம்பிக்கில் 'பலூன்' புறாக்கள், 'பேப்பர்' புறாக்கள் பறக்கவிடப்பட்டன. இப்போட்டியில் சோவியத் யூனியன் 55 தங்கம், 31 வெள்ளி, 46 வெண்கலப் பதக்கங்களுடன் முதலிடம் பெற்று அசத்தியது.
நீச்சல் போட்டியில் 6 பிரிவில் (50, 100 மீ., 'பிரீஸ்டைல்', 100 மீ., 'பட்டர்பிளை', 100 மீ., 'பேக்ஸ்டிரோக்', 4x100 மீ., 'பிரீஸ்டைல்', 4x100 மீ., 'மெட்லே') பங்கேற்ற ஜெர்மனி வீராங்கனை கிறிஸ்டின் ஓட்டோ, 6 தங்கம் வென்றார். இதன்மூலம் ஒரு ஒலிம்பிக் சீசனில், 6 தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற வரலாறு படைத்தார். தவிர இவர், உலக சாம்பியன்ஷிப் (7 தங்கம், 2 வெள்ளி), ஐரோப்பிய சாம்பியன்ஷிப் (9 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலம்) போட்டிகளிலும் பதக்கங்களை கைப்பற்றினார்.
'கோல்டன் ஸ்லாம்' ஸ்டெபி
ஜெர்மனியை சேர்ந்த டென்னிஸ் வீராங்கனை ஸ்டெபி கிராப், 1988ல் நடந்த ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன், யு.எஸ்., ஓபனில் கோப்பை வென்றார். 'சூப்பர் பார்மில்' இருந்த இவர், சியோல் ஒலிம்பிக் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் தங்கம் வென்றார். இப்படி ஒரே ஆண்டில் நான்கு கிராண்ட்ஸ்லாம், ஒலிம்பிக்கில் தங்கம் வென்றதால் 'கோல்டன் ஸ்லாம்' பெற்று சாதனை படைத்தார்.