ADDED : ஜூன் 21, 2024 10:29 PM

கோசிஸ்: சுலோவாகியாவில் நடந்த நீளம் தாண்டுதல் போட்டியில் ஷைலி சிங், வெள்ளிப்பதக்கம் வென்றார்.
சுலோவாகியாவில் சர்வதேச 'ஜம்ப்' போட்டி நடந்தது. இதில் நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், 'டிரிபிள் ஜம்ப்' என 3 போட்டி நடந்தன. பெண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஷைலி சிங் பங்கேற்றார். ஐந்தாவது வாய்ப்பில் அதிகபட்சமாக 6.43 மீ., துாரம் தாண்டி, இரண்டாவது இடம் பிடிக்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
பல்கேரியாவின் மிட்கோவா (6.70 மீ.,) தங்கம் வென்றார். பிரிட்டனின் ஹாப்கின்ஸ் (6.40 மீ.,) வெண்கலம் கைப்பற்றினார்.
ஆண்களுக்கான 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் இந்தியாவின் எல்தோஷ் பால், 16.45 மீ., துாரம் தாண்டி, வெண்கலப்பதக்கம் வசப்படுத்தினார். தமிழகத்தின் பிரவீன் சித்ரவேல், 15.87 மீ., துாரம் மட்டும் தாண்டி, 6வது இடம் பிடித்தார்.