/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/முதல் தங்கம் யாருக்கு: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்முதல் தங்கம் யாருக்கு: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
முதல் தங்கம் யாருக்கு: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
முதல் தங்கம் யாருக்கு: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
முதல் தங்கம் யாருக்கு: பாரிஸ் ஒலிம்பிக் கவுன்ட் டவுண்
ADDED : ஜூன் 21, 2024 11:46 PM

முதல் நவீன ஒலிம்பிக் போட்டி 1896 (ஏப். 6--15) கிரீசில் உள்ள ஏதென்ஸ் நகரில் நடந்தது. அமெரிக்கா, ஜெர்மனி உட்பட 14 நாடுகளை சேர்ந்த 241 வீரர்கள் பங்கேற்றனர். வீராங்கனைகள் பங்கேற்க அனுமதி வழங்கபடவில்லை. தடகளம், துப்பாக்கி சுடுதல், நீச்சல் உள்ளிட்ட 9 வகையான விளையாட்டுகள் நடந்தன. வெற்றியாளருக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது. இரண்டாவது இடம் பிடித்தவருக்கு செம்பு பதக்கம் கொடுக்கப்பட்டது. பின் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சார்பில் தங்கம், வெள்ளி, வெண்கலம் என பதக்கப்பட்டியல் மாற்றி அமைக்கப்பட்டது. அமெரிக்க வீரர் ஜேம்ஸ் கானோல்லி, 'டிரிபிள் ஜம்ப்' போட்டியில் முதல் தங்கம் வென்றார்.
கடலில் நீச்சல்
நீச்சலில் ஹங்கேரி வீரர் ஆல்பிரட் ஹாஜோஸ் அசத்தினார். இவரது தந்தை ஆற்றில் மூழ்கி இறந்ததால், நீச்சலின் ஆபத்து குறித்து உணர்ந்திருந்தார். அப்போது நீச்சல் போட்டி நடத்த குளம் இல்லை. படகில் அழைத்துச் சென்று கடலில் ஒரு குறிப்பிட்ட தூரத்தில் இறக்கி விட்டு விடுவர். அங்கிருந்து நீச்சல் அடித்து கரைக்கு திரும்பி வர வேண்டும். 1200 மீ., நீச்சலில் கரைக்கு திரும்பிய ஒரே வீரர் ஆல்பிரட் தான்.
மாரத்தான் பெருமை
மாரத்தான் ஓட்டத்தில் கிரீஸ் வீரர் ஸ்பைரி டான் லுாயி முதலில் வந்தார். இவருக்கும் அடுத்த வந்தவருக்கும் இடையே 7 நிமிட இடைவெளி இருந்தது. இதைக் கண்ட அங்கிருந்த ஒரு லட்சம் பார்வையாளர்கள் ஆரவாரம் செய்தனர்.
எக்ஸ்டிராஸ்
20 பதக்கம்
முதலாவது ஒலிம்பிக் போட்டியில் 11 தங்கம், 7 வெள்ளி, 2 வெண்கலம் என 20 பதக்கங்கள் வென்ற அமெரிக்கா முதலிடம் பிடித்தது. போட்டியை நடத்திய கிரீஸ் 10 தங்கம், 17 வெள்ளி, 19 வெண்கலம் என 46 பதக்கங்களுடன் 2வது இடத்தை கைப்பற்றியது.