/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/'ரவுண்டு-16' சுற்றில் போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் முன்னேற்றம்'ரவுண்டு-16' சுற்றில் போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் முன்னேற்றம்
'ரவுண்டு-16' சுற்றில் போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் முன்னேற்றம்
'ரவுண்டு-16' சுற்றில் போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் முன்னேற்றம்
'ரவுண்டு-16' சுற்றில் போர்ச்சுகல்: 'யூரோ' கால்பந்தில் முன்னேற்றம்
ADDED : ஜூன் 23, 2024 12:11 AM

டார்ட்மண்ட்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் போர்ச்சுகல் அணி 3-0 என துருக்கியை வீழ்த்தியது.
ஜெர்மனியின் டார்ட்மண்ட் நகரில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'எப்' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-6' போர்ச்சுகல் அணி, 42வது இடத்தில் உள்ள துருக்கி அணியை எதிர்கொண்டது. துவக்கத்தில் இருந்து ஆதிக்கம் செலுத்திய போர்ச்சுகல் அணிக்கு 21வது நிமிடத்தில் பெர்னார்டோ சில்வா ஒரு கோல் அடித்தார். பின், 28வது நிமிடத்தில் துருக்கி வீரர் சமேத் அகாய்டின் 'சேம்சைடு' கோல் அடித்து ஏமாற்றினார். முதல் பாதி முடிவில் போர்ச்சுகல் அணி 2-0 என முன்னிலை பெற்றிருந்தது.
இரண்டாவது பாதியிலும் அசத்திய போர்ச்சுகல் அணிக்கு 56வது நிமிடத்தில் புருனோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய துருக்கி அணியினரால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. முதல் போட்டியில் செக்குடியரசை வீழ்த்திய போர்ச்சுகல் அணி, தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்து 'ரவுண்டு-16' சுற்றுக்கு முன்னேறியது.