/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/ருமேனியாவை வீழ்த்தியது பெல்ஜியம்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்ருமேனியாவை வீழ்த்தியது பெல்ஜியம்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்
ருமேனியாவை வீழ்த்தியது பெல்ஜியம்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்
ருமேனியாவை வீழ்த்தியது பெல்ஜியம்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்
ருமேனியாவை வீழ்த்தியது பெல்ஜியம்: 'யூரோ' கால்பந்தில் கலக்கல்
ADDED : ஜூன் 23, 2024 11:25 PM

கொலோன்: 'யூரோ' கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பெல்ஜியம் அணி 2-0 என ருமேனியாவை வீழ்த்தியது.
ஜெர்மனியில், ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் ('யூரோ' கோப்பை) தொடர் நடக்கிறது. இதன் 'இ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-3' பெல்ஜியம் அணி, 47வது இடத்தில் உள்ள ருமேனியாவை எதிர்கொண்டது. முதல் போட்டியில் உக்ரைனை வீழ்த்திய உற்சாகத்தில் ருமேனியா களமிறங்கியது. சுலோவாகியாவிடம் தோல்வியடைந்த பெல்ஜியம், வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் விளையாடியது.
ஆட்டத்தின் 2வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ரொமேலு லுகாகு 'பாஸ்' செய்த பந்தில் யுரி டைல்மன்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் பெல்ஜியம் 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 63வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ரொமேலு லுகாகு ஒரு கோல் அடித்தார். ஆனால் 'வார்' தொழில்நுட்பத்தின்மூலம் 'ஆப்சைடு' என கண்டறிய கோல் திரும்பப்பெறப்பட்டது. தொடர்ந்து அசத்திய பெல்ஜியம் அணிக்கு 80வது நிமிடத்தில் கெவின் டி புருய்ன் ஒரு கோல் அடித்து கைகொடுத்தார். கடைசி நிமிடம் வரை போராடிய ருமேனிய வீரர்களால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை.
ஆட்டநேர முடிவில் பெல்ஜியம் அணி 2-0 என்ற கணக்கில் முதல் வெற்றியை பதிவு செய்தது. 'இ' பிரிவில் தலா 3 புள்ளிகளுடன் ருமேனியா, பெல்ஜியம், சுலோவாகியா, உக்ரைன் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.