/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/செக்குடியரசு-ஜார்ஜியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'செக்குடியரசு-ஜார்ஜியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
செக்குடியரசு-ஜார்ஜியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
செக்குடியரசு-ஜார்ஜியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
செக்குடியரசு-ஜார்ஜியா 'டிரா': 'யூரோ' கால்பந்தில் 'விறுவிறு'
ADDED : ஜூன் 23, 2024 12:09 AM

ஹாம்பர்க்: செக்குடியரசு, ஜார்ஜியா அணிகள் மோதிய 'யூரோ' கோப்பை கால்பந்து போட்டி 1-1 என 'டிரா' ஆனது.
ஜெர்மனியின் ஹாம்பர்க்கில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'எப்' பிரிவு லீக் போட்டியில் ஜார்ஜியா, செக்குடியரசு அணிகள் மோதின. 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (45+4வது நிமிடம்) கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் ஜார்ஜியாவின் ஜார்ஜஸ் மிகுடாட்சே கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் ஜார்ஜியா 1-0 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட செக்குடியரசு அணிக்கு 59வது நிமிடத்தில் பாட்ரிக் ஷிக் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். பின் இரு அணியினரால் கூடுதலாக கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் போட்டி 1-1 என 'டிரா' ஆனது.