/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/பெல்ஜியம் அணி ஏமாற்றம்: சுலோவாகியாவிடம் வீழ்ந்ததுபெல்ஜியம் அணி ஏமாற்றம்: சுலோவாகியாவிடம் வீழ்ந்தது
பெல்ஜியம் அணி ஏமாற்றம்: சுலோவாகியாவிடம் வீழ்ந்தது
பெல்ஜியம் அணி ஏமாற்றம்: சுலோவாகியாவிடம் வீழ்ந்தது
பெல்ஜியம் அணி ஏமாற்றம்: சுலோவாகியாவிடம் வீழ்ந்தது
ADDED : ஜூன் 17, 2024 11:50 PM

பிராங்பர்ட்: சுலோவாகியாவுக்கு எதிரான 'யூரோ' கால்பந்து போட்டியில் பெல்ஜியம் அணி தோல்வியடைந்தது.
ஜெர்மனியின் பிராங்பர்ட் நகரில் நடந்த 'யூரோ' கோப்பை கால்பந்து 'இ' பிரிவு லீக் போட்டியில் உலகின் 'நம்பர்-3' பெல்ஜியம் அணி, 48வது இடத்தில் உள்ள சுலோவாகியா அணியை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 3வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் ரோமேலு லுகாகுவின் கோலடிக்கும் முயற்சி தடுக்கப்பட்டது. பின் 7வது நிமிடத்தில் சுலோவாகியா அணியின் இவான் ஷ்ரான்ஸ் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் சுலோவாகியா அணி 1-0 என முன்னிலை வகித்திருந்தது.
இரண்டாவது பாதியின் 87வது நிமிடத்தில் பெல்ஜியத்தின் லுகாகு அடித்த கோல், 'வார்' தொழில்நுட்பத்தால் திரும்ப பெறப்பட்டது. கடைசி நிமிடம் வரை போராடிய பெல்ஜியம் அணியினரால் கோல் அடிக்க முடியவில்லை. ஆட்டநேர முடிவில் சுலோவாகியா 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.