/செய்திகள்/விளையாட்டு/கால்பந்து/துருக்கியிடம் வீழ்ந்தது ஜார்ஜியா * யூரோ கோப்பை கால்பந்தில்...துருக்கியிடம் வீழ்ந்தது ஜார்ஜியா * யூரோ கோப்பை கால்பந்தில்...
துருக்கியிடம் வீழ்ந்தது ஜார்ஜியா * யூரோ கோப்பை கால்பந்தில்...
துருக்கியிடம் வீழ்ந்தது ஜார்ஜியா * யூரோ கோப்பை கால்பந்தில்...
துருக்கியிடம் வீழ்ந்தது ஜார்ஜியா * யூரோ கோப்பை கால்பந்தில்...
ADDED : ஜூன் 18, 2024 11:58 PM

டார்ட்மண்ட்: யூரோ கால்பந்தில் துருக்கி அணி 3-1 என்ற கோல் கணக்கில் ஜார்ஜியாவை வென்றது.
ஐரோப்பிய அணிகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து தொடர் ஜெர்மனியில் நடக்கிறது.
நேற்று நடந்த போட்டியில் 'பிபா' தரவரிசையில் 40 வது இடத்திலுள்ள துருக்கி அணி, 75வது இடத்திலுள்ள ஜார்ஜியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியின் 25வது நிமிடத்தில் துருக்கி வீரர் அடித்த பந்தை, ஜார்ஜியாவின் லாஷா தலையால் முட்டி வெளியே தள்ள முயன்றார். பந்து நேராக மெர்ட் மல்டுர் கால்களுக்கு சென்றது. அதை அப்படியே வலது காலால் உதைத்து கோலாக மாற்றினார். துருக்கி 1-0 என முன்னிலை பெற்றது. அடுத்த நிமிடம் துருக்கியின் கெனான் ஒரு கோல் அடித்தார். 'வார்' தொழில்நுட்பத்தில் இது 'ஆப்சைடு' என தெரியவர, கோல் வழங்கப்படவில்லை.
32வது நிமிடம் ஜார்ஜியா வீரர் ஜார்ஜி கோச்சோராஷ்விலி, துருக்கி வீரரை லாவகமாக ஏமாற்றி பந்தை சக வீரர் ஜார்ஜஸிற்கு தந்தார்.
அதை அவர் கோலாக மாற்ற, ஸ்கோர் 1-1 என சமன் ஆனது. 35வது நிமிடம் ஜார்ஜஸ் அடித்த பந்து, கோல் போஸ்டுக்கு அருகில் விலகிச் சென்றது. முதல் பாதி 1-1 என சமனில் முடிந்தது.
இரண்டாவது பாதியில் 65வது நிமிடம் துருக்கியின் ஆர்டா குலெர் ஒரு கோல் அடித்தார். போட்டியின் கடைசி 'ஸ்டாப்பேஜ்' நேரத்தில் (90+7 வது) துருக்கி வீரர் கெரெம் தன் பங்கிற்கு கோல் அடித்தார். முடிவில் துருக்கி அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.