/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/திருப்பூர் அணி ஏமாற்றம்: சேப்பாக்கத்திடம் வீழ்ந்ததுதிருப்பூர் அணி ஏமாற்றம்: சேப்பாக்கத்திடம் வீழ்ந்தது
திருப்பூர் அணி ஏமாற்றம்: சேப்பாக்கத்திடம் வீழ்ந்தது
திருப்பூர் அணி ஏமாற்றம்: சேப்பாக்கத்திடம் வீழ்ந்தது
திருப்பூர் அணி ஏமாற்றம்: சேப்பாக்கத்திடம் வீழ்ந்தது
ADDED : ஜூலை 10, 2024 11:06 PM

சேலம்: டி.என்.பி.எல்., லீக் போட்டியில் ஏமாற்றிய திருப்பூர் அணி 15 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
சேலத்தில் நடந்த டி.என்.பி.எல்., லீக் போட்டியில் சேப்பாக்கம், திருப்பூர் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற திருப்பூர் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
சேப்பாக்கம் அணிக்கு சந்தோஷ் குமார் (8), கேப்டன் பாபா அபராஜித் (9) ஏமாற்றினர். ஜெகதீசன் (36) நம்பிக்கை தந்தார். ஆன்ட்ரி சித்தார்த் (23) ஆறுதல் தந்தார். விஜய் சங்கர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய பிரதோஷ் ரஞ்சன் பான், 39 பந்தில் அரைசதம் கடந்தார்.
சேப்பாக்கம் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 157 ரன் எடுத்தது. ரஞ்சன் பால் (67), ஷாஜகான் (4) அவுட்டாகாமல் இருந்தனர்.
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய திருப்பூர் அணிக்கு ராதாகிருஷ்ணன் (15), அமித் சாத்விக் (14), துஷார் ரஹேஜா (20) சோபிக்கவில்லை. பாலசந்தர் அனிருத் (7), முகமது அலி (12), கேப்டன் விஜய் சங்கர் (4), புவனேஸ்வரன் (6) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 32 ரன் தேவைப்பட்டன. அபிஷேக் தன்வர் பந்துவீசினார். இரண்டாவது பந்தை சிக்சருக்கு அனுப்பி அரைசதம் கடந்த கணேஷ் (61) 'ரன்-அவுட்' ஆனார். இந்த ஓவரில் 16 ரன் மட்டும் கிடைத்தது.
திருப்பூர் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 142 ரன் எடுத்து தோல்வியடைந்தது. சேப்பாக்கம் சார்பில் கணேஷன் பெரியசாமி 2 விக்கெட் வீழ்த்தினார்.