/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/ஆஸி., அணி கலக்கல் * வெளியேறியது நமீபியாஆஸி., அணி கலக்கல் * வெளியேறியது நமீபியா
ஆஸி., அணி கலக்கல் * வெளியேறியது நமீபியா
ஆஸி., அணி கலக்கல் * வெளியேறியது நமீபியா
ஆஸி., அணி கலக்கல் * வெளியேறியது நமீபியா
ADDED : ஜூன் 12, 2024 11:16 PM

நார்த் சவுண்டு: உலக கோப்பை தொடரில் 'ஹாட்ரிக்' வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி, 'சூப்பர்-8' சுற்றுக்கு முன்னேறியது.
வெஸ்ட் இண்டீசில் நடந்த 'டி-20' உலக கோப்பை கிரிக்கெட் 'பி' பிரிவு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா, நமீபியா மோதின. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலியா பீல்டிங் தேர்வு செய்தது.
எராஸ்மஸ் ஆறுதல்
நமீபிய அணி, ஆஸ்திரேலிய பவுலிங் 'வேகத்தில்' துவக்கத்தில் இருந்தே அதிர்ந்தது. ஹேசல்வுட் பந்துகளில் மைக்கேல் வான் (10), டேவின் (2) அவுட்டாகினர். கம்மின்ஸ் பந்தில் பிரைலின்க் (1) வீழ்ந்தார். எல்லிசிடம், ஸ்மிட் (3) சிக்கினார். இதன் பின் ஜாம்பா 'சுழலில்' சிக்கியது நமீபியா.
கிரீன் (1), டேவிட் (1), ரூபன் (7) ஒற்றை இலக்க ரன்னில் திரும்பினர். பெர்னார்டு 'டக்' அவுட்டாக, நமீபிய அணி 43 ரன்னுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தள்ளாடியது. கேப்டன் எராஸ்மஸ் மட்டும் அதிகபட்சம் 36 ரன் எடுத்தார். கடைசியில் ஷிக்கோன்கோ (0) அவுட்டாக, நமீபிய அணி 17 ஓவரில் 72 ரன்னுக்கு சுருண்டது. ஆஸ்திரேலியா சார்பில் ஆடம் ஜாம்பா அதிகபட்சம் 4 விக்கெட் சாய்த்தார்.
ஹெட் விளாசல்
எளிய இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணிக்கு டிராவிஸ் ஹெட், வார்னர் ஜோடி மின்னல் வேக துவக்கம் கொடுத்தது. வார்னர் 8 பந்தில் 20 ரன் எடுத்து அவுட்டானார். மறுபக்கம் ஹெட் பவுண்டரி மழை பொழிய, வெற்றி எளிதானது. ஆஸ்திரேலியா 5.4 ஓவரில் 74/1 ரன் எடுத்து, 9 விக்கெட்டில் வெற்றி பெற்றது. நமீபியா அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.
100
சர்வதேச 'டி-20' அரங்கில் 100 விக்கெட் என்ற மைல்கல்லை எட்டிய முதல் ஆஸ்திரேலிய பவுலர் ஆனார் ஜாம்பா. இவர் 83 போட்டியில் 100 விக்கெட் சாய்த்துள்ளார். ஸ்டார்க் (76), ஹேசல்வுட் (64) அடுத்து உள்ளனர்.
இலங்கை ஏமாற்றம்
இலங்கை-நேபாள அணிகள் மோத இருந்த 'டி' பிரிவு லீக் போட்டி மழையால் ரத்தானது. 3 போட்டியில் 2 தோல்வி (1 ரத்து) அடைந்த இலங்கை அடுத்த சுற்று வாய்ப்பை இழந்தது.