ADDED : ஜூன் 12, 2024 10:27 PM

லண்டன்: இந்தியாவின் ஷர்துல் தாகூருக்கு வெற்றிகரமாக 'ஆப்பரேஷன்' முடிந்தது.
இந்திய வேகப்பந்துவீச்சு 'ஆல்-ரவுண்டர்' ஷர்துல் தாகூர் 32. மகாராஷ்டிராவை சேர்ந்த இவர், இதுவரை 11 டெஸ்ட் (31 விக்கெட்), 47 ஒருநாள் (65), 25 சர்வதேச 'டி-20' (33) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த தென் ஆப்ரிக்க தொடரின் போது இவரது வலது காலில் காயம் ஏற்பட்டது. சிகிச்சை மேற்கொண்டு காயத்தை பொருட்படுத்தாது ரஞ்சி கோப்பையில் பங்கேற்ற இவர், மும்பை அணி (16 விக்கெட்) 42வது முறையாக சாம்பியன் பட்டம் வெல்ல உதவினார். சமீபத்தில் முடிந்த 17வது ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணி (5 விக்கெட்) சார்பில் பங்கேற்றார்.
பி.சி.சி.ஐ., ஒப்பந்தப்பட்டியலில் 'சி' கிரேடில் இடம் பெற்றுள்ள ஷர்துல் தாகூரின் கால் காயத்துக்கு லண்டனில் 'ஆப்பரேஷன்' நடந்தது. இதற்கான போட்டோவை சமூகவலைதளத்தில் பதிவிட்ட இவர், 'ஆப்பரேஷன் சக்சஸ்' என தெரிவித்திருந்தார். ஏற்கனவே 2019ல் இதே காலில் ஏற்பட்ட காயத்துக்கு 'ஆப்பரேஷன்' செய்து கொண்டார். மூன்று மாத காலம் ஓய்வுக்குப் பின் பயிற்சியை துவக்க உள்ளார்.