/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இது எங்க ஏரியா... சொல்லி அடிச்ச சூர்யா * 'சூப்பர்-8' சுற்றில் இந்தியாஇது எங்க ஏரியா... சொல்லி அடிச்ச சூர்யா * 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா
இது எங்க ஏரியா... சொல்லி அடிச்ச சூர்யா * 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா
இது எங்க ஏரியா... சொல்லி அடிச்ச சூர்யா * 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா
இது எங்க ஏரியா... சொல்லி அடிச்ச சூர்யா * 'சூப்பர்-8' சுற்றில் இந்தியா
ADDED : ஜூன் 13, 2024 12:18 AM

நியூயார்க்: 'டி-20' உலக கோப்பை தொடரில் இந்திய அணி, 7 விக்கெட்டில்
அமெரிக்காவை சாய்த்தது இந்தியா. பேட்டிங்கில் மிரட்டிய சூர்யகுமார்
அரைசதம் விளாசி வெற்றிக்கு கைகொடுக்க, இந்திய அணி 'சூப்பர்-8' சுற்றுக்கு
முன்னேறியது.
அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த லீக் போட்டியில் உலகத்
தரவரிசையில் 'நம்பர்-1' ஆக உள்ள இந்திய அணி, 17 வது இடத்தில் இருந்த
அமெரிக்காவை எதிர்கொண்டது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா,
பீல்டிங் தேர்வு செய்தார்.
அர்ஷ்தீப் நம்பிக்கை
அமெரிக்க
அணிக்கு ஷயான் ஜஹாங்கிர், ஸ்டீவன் டெய்லர் ஜோடி துவக்கம் கொடுத்தது. முதல்
ஓவரை வீசிய அர்ஷ்தீப் சிங், முதல் பந்தில் ஷயான் (0), கடைசி பந்தில்
ஆன்ட்ரிசை (2) அவுட்டாக்கினார். ஆரோன் ஜோன்ஸ் (11) வெளியேற, அமெரிக்க அணி 8
ஓவரில் 26/3 ரன் எடுத்தது.
டெய்லரை (24), போல்டாக்கினார் அக்சர்.
பாண்ட்யா பந்தில் ஆண்டர்சன் (15) அவுட்டாக்கினார். அர்ஷ்தீப் சிங், ஹர்மீத்
சிங்கை (10) திருப்பி அனுப்பினார். அமெரிக்க அணி 20 ஓவரில் 8
விக்கெட்டுக்கு 110 ரன் மட்டும் எடுத்தது. அர்ஷ்தீப் சிங் 4, பாண்ட்யா 2
விக்கெட் சாய்த்தனர்.
திணறல் துவக்கம்
இந்திய அணிக்கு ரோகித்
சர்மா, கோலி ஜோடி துவக்கம் கொடுத்தது. நேத்ரா வீசிய முதல் ஓவரின் 2 வது
பந்தில் 'டக்' அவுட்டானார் கோலி. மீண்டும் மிரட்டிய நேத்ரா, தனது அடுத்த
ஓவரில் ரோகித்தை (3) அவுட்டாக்கினார். பின் வந்த சூர்யகுமார், நேத்ரா
பந்தில் சிக்சர் அடித்து நம்பிக்கை தந்தார்.
மறுபக்கம் ஜஸ்தீப் பந்தில்
ஒரு சிக்சர் அடித்தார் ரிஷாப் பன்ட். இவர் 18 ரன் எடுத்த நிலையில், அலி
கான் பந்தில் போல்டானார். இந்திய அணி 44/3 ரன் என திணறியது. சூர்யகுமார்,
ஷிவம் துபே இணைந்து அணியை மீட்க முயற்சித்தனர். ஜஸ்தீப் பந்தில் துபே ஒரு
பவுண்டரி அடித்தார்.
சூர்யகுமார் அபாரம்
22 ரன்னில்
சூர்யகுமார் கொடுத்த 'கேட்ச்' வாய்ப்பை, நழுவிட்டார் நேத்ரா. வாய்ப்பை
பயன்படுத்திக் கொண்ட சூர்யகுமார் (செல்லமாக 'சூர்யா'), 'டி-20' கிரிக்கெட்
தனக்கு பிடித்த 'ஏரியா' என மீண்டும் நிரூபித்தார். அமெரிக்க பந்துவீச்சை
எளிதாக சமாளித்தார். அலி கான் பந்தில் ஒரு பவுண்டரி அடித்தார். நீண்ட நேரம்
தடுமாறிய துபே, ஆண்டர்சன் பந்தில் சிக்சர் அடித்து, ரசிகர்களுக்கு
உற்சாகம் தந்தார். தொடர்ந்து ஷாத்லே ஓவரில், சூர்யகுமார் தலா சிக்சர்,
பவுண்டரி அடிக்க, வெற்றி எளிதானது.
இந்திய அணி 18.2 ஓவரில் 111/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது. அரைசதம் விளாசிய சூர்யகுமார் (50), துபே (30) அவுட்டாகாமல் இருந்தனர்.
இது 'பெஸ்ட்'
'டி-20'
உலக கோப்பை தொடரில் சிறந்த பந்து வீச்சை பதிவு செய்த இந்திய பவுலர் ஆனார்
அர்ஷ்தீப் சிங். இவர் நேற்று 9 ரன்னுக்கு 4 விக்கெட் (4 ஓவர்) சாய்த்தார்.
இதற்கு முன் 2014ல் அஷ்வின் 3.2 ஓவரில் 11 ரன்னுக்கு 4 விக்கெட் வீழ்த்தி
இருந்தார்.
5 'பெனால்டி' ரன்
நேற்று அமெரிக்க அணியினர்
பந்துவீசிய போது, ஓவர்களுக்கு இடையே நிர்ணயிக்கப்பட்டதை விட, மூன்று முறை
அதிக நேரம் எடுத்துக் கொண்டனர். புதிய விதிப்படி, இந்தியாவுக்கு (பேட்டிங்
அணி) 5 ரன் கூடுதலாக ('பெனால்டி) வழங்கப்பட்டது.
மூன்றாவது பவுலர்
'டி-20'
உலக கோப்பை தொடரில் முதல் பந்தில் விக்கெட் சாய்த்த முதல் இந்திய பவுலர்
ஆனார் அர்ஷ்தீப் சிங். நேற்று இவர் முதல் பந்தில் அமெரிக்காவின் ஷயானை
அவுட்டாக்கினார். ஒட்டுமொத்தமாக ஐந்தாவது பவுலர் ஆனார்.
* சர்வதேச
'டி-20'ல் போட்டியின் முதல் பந்தில் விக்கெட் சாய்த்த மூன்றாவது இந்திய
பவுலர் ஆனார் அர்ஷ்தீப் சிங். முன்னதாக புவனேஷ்வர் (3 முறை), ஹர்திக்
பாண்ட்யா (1) இதுபோல அவுட்டாக்கினர்.
18
அமெரிக்க அணி
நேற்று முதல் 6 ஓவரில் 18/2 ரன் எடுத்தது. 'டி-20' உலக தொடரில் 'பவர் பிளே'
ஓவரில் இந்தியாவுக்கு எதிராக எடுக்கப்பட்ட குறைந்த ஸ்கோர் ஆனது. முன்னதாக
2014ல் வெஸ்ட் இண்டீஸ் அணி 24/0 ரன் எடுத்திருந்தது.
வெல்லுமா நியூசி.,
வெஸ்ட்
இண்டீசில் இன்று நடக்கும் 'சி' பிரிவு லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்,
நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. முதல் இரு மோதலில் வெற்றி பெற்ற வெஸ்ட்
இண்டீஸ் அணி, இன்று வென்றால் 6 புள்ளியுடன் 'சூப்பர்-8' சுற்றுக்கு
முன்னேறும். நியூசிலாந்து அணி முதல் போட்டியில் ஆப்கானிஸ்தானிடம் தோற்றது.
இன்று கட்டாயம் வெல்ல வேண்டும். இல்லை எனில் அடுத்த சுற்று வாய்ப்பை இழக்க
நேரிடும்.
சிக்கலில் இங்கிலாந்து
'பி' பிரிவில் இன்று
நடக்கும் போட்டியில் (நார்த் சவுண்டு, வெ.இண்டீஸ்) இங்கிலாந்து, ஓமன்
மோதுகின்றன. ஸ்காட்லாந்துக்கு எதிரான முதல் போட்டி மழையால் ரத்தாக,
இங்கிலாந்து 1 புள்ளி மட்டும் பெற்றது. அடுத்து ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.
ஓமனுக்கு எதிராக கட்டாயம் வென்றால் மட்டுமே, அடுத்த சுற்று வாய்ப்பை
தக்கவைக்க முடியும். ஆனால் மழையால் (24 சதவீதம்) போட்டி பாதிக்கப்படும்
வாய்ப்புள்ளதால், நடப்பு சாம்பியன் இங்கிலாந்து இக்கட்டான நிலையில் உள்ளது.