/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/தென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்துதென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து
தென் ஆப்ரிக்கா 'திரில்' வெற்றி: கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து

குயின்டன் அபாரம்
தென் ஆப்ரிக்க அணிக்கு ரீசா ஹென்டிரிக்ஸ், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. மொயீன் அலி வீசிய 2வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய குயின்டன், ஆர்ச்சர் வீசிய 4வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர், ஒரு பவுண்டரி அடித்தார். அபாரமாக ஆடிய குயின்டன், 22 பந்தில் அரைசதம் எட்டினார். முதல் விக்கெட்டுக்கு 86 ரன் சேர்த்த போது மொயீன் 'சுழலில்' ஹென்டிரிக்ஸ் (19) சிக்கினார். ஆர்ச்சர் 'வேகத்தில்' குயின்டன் (65) வெளியேறினார். கிளாசன் (9), கேப்டன் மார்க்ரம் (1) சோபிக்கவில்லை. டேவிட் மில்லர் (43) கைகொடுக்க, தென் ஆப்ரிக்க அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 163 ரன் எடுத்தது. ஸ்டப்ஸ் (12), மஹாராஜ் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.
புரூக் அசத்தல்
சவாலான இலக்கை விரட்டிய இங்கிலாந்து அணிக்கு பில் சால்ட் (11) சுமாரான துவக்கம் கொடுத்தார். கேஷவ் மஹாராஜ் 'சுழலில்' பேர்ஸ்டோவ் (16), கேப்டன் பட்லர் (17) சிக்கினர். மொயீன் அலி (9) ஏமாற்ற, இங்கிலாந்து அணி 61 ரன்னுக்கு 4 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின் இணைந்த ஹாரி புரூக், லிவிங்ஸ்டன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஐந்தாவது விக்கெட்டுக்கு 78 ரன் சேர்த்த போது ராபாடா பந்தில் லிவிங்ஸ்டன் (33) அவுட்டானார். அபாரமாக ஆடிய புரூக், 34 பந்தில் அரைசதம் கடந்தார்.